பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 நினைவு அலைகள் நான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது சென்னை எத்திராசு மகளிர் கல்லூரியின் வெள்ளிவிழா வந்தது.அவ் விழாவில் பிரதமர் இந்திராகாந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது திரு. நா. மகாலிங்கம் அவர்கள் அக் கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவராக விளங்கினார். பிரதமர் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மகாலிங்கத்தோடு தொடர்பு கொண்டேன். “வெள்ளி விழாவை ஒட்டி பண்டிதர் சவகர்லால் நேரு நினைவு அறக்கட்டளை ஒன்றைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிறுவினால் நன்றாயிருக்கும். "அதை விழா மேடையில் பிரதமர் இந்திராகாந்தியின் முன் அறிவித்தால் சிறப்பாக இருக்கும்’ என்று யோசனை கூறினேன். திரு. மகாலிங்கம் உடனே இசைந்தார். அப்படியே செய்தார். விழாவின்போது, மேற்படி அறக்கட்டளை நிறுவ ரூ.10,000 அளித்தார். - அடுத்து திரு. எம். பி. தாமோதரன் அவர்களோடு தொடர்பு கொண்டேன். “பிரதமர் இந்திரா காந்தி, சென்னையில் இராசா சர் அவர்கள் முன் நின்று, நிறுவத் திட்டமிட்டுள்ள மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப் போகிறார்கள். எனவே, பிரதமர் இந்திரா காந்தி அறக்கட்டளையொன்றை நிறுவினால் நன்றாயிருக்குமே” என்று கூறினேன். சில மணிகள் ஓடின. தாமோதரன் தொலைபேசியில் என்னுடன் பேசினார். இராசா. சா, பிரதமர் இந்திரா காந்தி அறக்கட்டளை, ஆளுநர். கே. கே. ஷா அறக்கட்டளை, டாக்டர். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை ஆகியவற்றை நிறுவ ஒப்புக் கொண்டார். அத்தனை அறக்கட்டளைகளும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும். ஒவ்வொன்றிற்கும் ரூ.10,000/விழாவின்போது அளிக்கப்படும் என்று தகவல் கொடுத்தார். காமராசரின் பெயரில் அறக்கட்டளை “பெருந்தலைவர் காமராசரின் பெயரில் அறக்கட்டளை நிறுவ வேண்டாமா?” என்று தாமோதரனைத் துண்டினேன். இராசா. சர், அவர்களே அப்படிச் செய்ய முன்வந்தார்.ஆனால் பெருந்தலைவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகத் தாமோதரன் எனக்குத் தெரிவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/825&oldid=788667" இலிருந்து மீள்விக்கப்பட்டது