பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/824

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தோ, காமராசர் மறைந்தாரே 805 சாவி தந்த மருந்து' இரவு வீடு திரும்பினோம். சில மணித்துளிகளில் தொலைபேசி ஒலித்தது. சாவி’ என்னோடு பேசி எனக்கு ஆறுதல் கூறினார். “உங்கள் பெருங்கவலைக்கு மருந்து கொடுக்கிறேன். காமராஜரைப் பற்றிய உணர்ச்சிகளை ஒரு கட்டுரை வடிவில் இன்றிரவே எழுதி விடுங்கள். நாளை காலை என் மகன் உங்கள் வீட்டுக்கு வந்து அதை வாங்கிக் கொண்டு வருவார். இவ்வார "தினமணிகதி’ரில் அக் கட்டுரையைச் சேர்த்து விடுகிறேன். நாளை காலை எனக்குக் கிடைத்தால்தான் இவ் விதழில் சேர்க்க முடியும்” என்றார். நான் கட்டுரை எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். விடியற்காலை எழுந்திருந்து எழுதினேன். பொழுது விடிய சாவியின் மகன் என் இல்லத்திற்கு வந்தார். கர்மவீரரைப் பற்றி, நான் எழுதியதைப் பெற்றுக்கொண்டு போனார். அடுத்த நாள் அது "தினமணிகதிரி'ல் வெளியாயிற்று. தலைவருள் மாணிக்கம் சாவி அதோடு நிற்கவில்லை. அக் கட்டுரை வெளியான அன்று பtண்டும் தொலைபேசியில் என்னோடு பேசினார். காமராசரைப் பற்றி உடனே ஒரு நூல் எழுதும்படி ஆலோசனை கூறினார். அப்படியே செய்தேன். ஒரு வாரத்தில் கையேட்டுப் பிரதி ஆயத்த மாயிற்று. தலைவருள் மாணிக்கம்’ என்ற தலைப்பில் அந் நூல் வெளிவந்தது. - கல்வி வள்ளல் காமராஜர் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை விரிவாக்கம் செய்து “கல்வி வள்ளல் காமராசர்’ என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தேன். அதை ‘எமரால்ட் பப்ளிகேசன்’ திரு. எம். டி. கோபாலகிருஷ்ணன் வெளியிட்டார். என்னைப் பொதுக்கல்வி இயக்குநராக்கி, முழு உரிமையும் தந்து, தமக்கு நம்பிக்கைக்கு உரியவனாக ஆக்கிக் கொண்டு கல்வி வெள்ளம் தமிழகமெங்கும் பெருக்கெடுத்து ஓடச்செய்த பெருந்தலைவருக்கு, நான் என் நன்றிக் கடனை, இவ் வகையில்தான் காட்டிக் கொள்ள முடிந்தது! இப்போது ஒன்று நினைவுக்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/824&oldid=788666" இலிருந்து மீள்விக்கப்பட்டது