பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B04 நினைவு அலைகள் காலை ஒன்பது மணி அளவில் ஒரு செய்தி வந்தது. இணைவேந்தர் இராசாவைக்கூடக் கேட்காமல், அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் சந்திரசேகரனை நியமிக்கும்படி ஆளுநர் கே. கே. வடிாவுக்கு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கூறி விட்டார் என்பதே அந்தச் செய்தி. இது நான் எதிர்பார்த்ததுதான்! சில வாரங்களில் என் இனிய நண்பர் சுதந்திரப் போராட்ட வீரர் - திரு. எம். பி. தாமோதரன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அது எனக்குப் பெரிய அதிர்ச்சியாகும். உண்மையான நண்பர் ஒருவரை இழந்து துன்பப்பட்டேன். 98. அந்தோ, காமராசர் மறைந்தாரே! 1975 அக்டோபர் இரண்டாம் நாள், என் இல்லத்தில், “தமிழ் மாநிலப் பாசிச எதிர்ப்பு மாநாட்டின் உட்குழுக் கூட்டமொன்று நடந்து கொண்டிருந்தது. அம் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருக்கும் பெரும்பொறுப்பை என்னிடம் கொடுத்தனர். வரவேற்புக் குழுவின் உட்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருக் கையில், திரு. பகீரதன் தொலைபேசியில் என்னோடு பேசினார். இடிபோன்ற செய்தியைச் சொன்னார். என்ன செய்தி? பெருந் தலைவர் காமராசர் மாரடைப்பால் மறைந்த செய்தி. உடனே அவர் இல்லத்துக்கு விரைந்தேன். துங்கம்பாக்கத்தில் காவல்துறை அலுவலர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். என் காரை நிறுத்தினார். ஏழை பங்காளரின் பூதவுடல் இராசாசி மண்டபத்திற்குப் போய்விட்டது” என்று கூறினார். இராசாசி மண்டபத்திற்கு விரைந்தேன். அண்ணா சிலைக்கு அப்பால் நகர முடியவில்லை. அவ்வளவு மக்கள் அதற்குள் கூடிவிட்டார்கள். எப்படி முயன்றும் உள்ளே போக முடியவில்லை மறுநாள் காலைதான் இராசாசி மண்டபம் சென்று, காமராஜருக்கு இறுதி வணக்கம் செலுத்த முடிந்தது. இழப்பின் மேல் இழப்பு. -- என்னை நன்றாகப் புரிந்து வைத்துள்ள பெரியவர்கள் மறைவது அடுத்தடுத்துத் தொடர்கிறது. அக்டோபர் மூன்றாம் நாள் மாலை அண்ணாசாலையில் ஒரு மாடிக்கட்டிடத்திலிருந்து காமராஜரின் இறுதி ஊர்வலத்தை என் மனைவியும் நானும் கண்டு கண்ணிர் பொழிந்தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/823&oldid=788665" இலிருந்து மீள்விக்கப்பட்டது