உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மீண்டும் துணைவேந்தாாக ஜி.ஆர்.டி விரும்பினர் 803 காமராசரின் விருப்பம் மறுநாள் காலை, 6-30 மணிக்குத் திரு. எம். பி. தாமோதரன் தொலைபேசியில் என்னை அழைத்தார். “பெருந்தலைவுர் ஆணைப்படி திரு. கு. இராசவேலு இன்னும் பதினைந்து மணித்துளிகளில் உங்களிடம் வருவார். அவரைப் பெருந்தலைவர் தூது அனுப்பியுள்ளார். உங்கள் பட்டறிவு விண்போகக்கூடாது. உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் துருப்பிடித்துப் போகக்கூடாது. உங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது அண்ணாமலை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. நீங்கள் ஒப்புக் கொண்டால், இராஜாவிடம் சொல்லி உங்களுக்கு ஏற்பாடு செய்யப் பெருந்தலைவர் விரும்புகிறார். “தயவு செய்து அதை ஒப்புக் கொள்ளுங்கள். உங்கள் இசைவைத் தெரிந்து உங்கள் வீட்டிலிருந்தே இராசவேலு பெருந்தலைவருக்குச் சொல்லி விடுவார். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்” என்று தாமோதரன் அறிவித்தார். இசைவளித்தேன் “இது தர்ம சங்கடமான நிலை. நாற்பது ஆண்டுகள் ஊழியனாக இருந்து விட்டேன். இனியாவது கட்டுகளின்றி இருக்க நினைத்தேன். பெருந்தலைவர் கட்டளையை மீற மனம் வரவில்லை. பெரியார் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சென்னைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றேன். இப்போது பெருந்தலைவர் கட்ட ளைக்குக் கீழ்ப்படிந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குப் போக உடன்படுகிறேன்” என்று பதிலுரைத்தேன். சில மணித்துளிகளில், இராசவேலு வந்து சேர்ந்தார். பெருந்தலைவர் பட்ட வேதனையை விவரித்தார். "அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்குப் போக நீங்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவராகவே வலிய வந்து சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தம் பரிந்துரையையும் சேர்த்துக் கூறினார். டாக்டர் சந்திரசேகரன் நியமனம் ஏற்கெனவே, தாமோதரனிடம் கூறியதைக் கூறினேன் இராசவேலு, என் வீட்டில் இருந்தபடியே பெருந்தலைவர் காமராசருக்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/822&oldid=788664" இலிருந்து மீள்விக்கப்பட்டது