உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/821

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802 நினைவு அலைகள் அழுக்குச் சட்டைக்காரர் பற்றி நூலகர் மோகன்ராஜ் நூலகத்திற்குள் நுழைந்தேன். வழியில் நின்று கொண்டிருந்த அழுக்குச் சட்டைக்காரர் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. உள்ளே நுழைந்ததும், நூலகர் முதல் முதலாக அழுக்குச் சட்டைக்காரரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “இந்த இளைஞர்தான் உங்களால் நூலகத்தில் உதவியாளராக இரு நாள்களுக்கு முன் நியமிக்கப்பட்டவர். இன்று முற்பகல் வேலையை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் அதிகாலையிலேயே\வாடகை சைக்கிள் ரிக்ஷா, ஒட்டுவதற்குப் புறப்பட்டு விட்டார். நடுப்பகல் இந் நியமனத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு இங்கு வந்து நாளை காலை வரையில் தவணை கேட்கிறார். ஒட்டிக் கொண்டு வந்த சைக்கிள் ரிக்ஷாவை அதன் முதலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, நாளை இங்குப் பணிக்கு வருவார்” என்று நூலகர் மோகன்ராஜ் என்னிடம் கூறினார். அனைவரிடமும் விடை பெற்றேன் கிங் தவணை கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்” என்று கூறிவிட்டு, உள்ளே சென்றேன். ஒவ்வொருவரோடும் கைகுலுக்கி விடை பெற்றுக் கொண்டேன். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப் பேற்ற அன்றும், அப் பதவியிலிருந்து விலகியபோதும் அடிப்படை ஊழியர் முதல், வைதிகப் பேராசிரியர்வரை நான் கைகுலுக்கிச் சமத்துவப் படுத்தியதைக் கண்டு, வைதிகர்கள் முகம் சுளிக்காமை, அவர்களுடைய பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்தது. கிண்டி வளாகத்திற்குப் புறப்படுவதற்குமுன் என் அலுவலக அறைக்குச் சென்றேன். அலுவல் முறையில் பதிவாளருக்கு புதிய நியமனம் பற்றிச் செய்தி வந்திருந்தது. அவர் உடனே அதை என்னிடம் காட்டினார். பாராட்டுக் கடிதம் டாக்டர். மால்கம் ஆதிசேசய்யா என் நண்பர். உடனே அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தை ஆயத்தம் செய்தேன். அதில் கையெழுத்திட்டு ஒர் ஆள் மூலம் உடனே அனுப்பிவிட்டு மணியைப் பார்த்தேன். மாலை 4.45 என்று அறிந்தேன். அதற்கு மேல் கிண்டி வளாகத்தில் எவரும் இருக்கமாட்டார்கள் என்று உணர்ந்தேன். எனவே, வீடு திரும்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/821&oldid=788663" இலிருந்து மீள்விக்கப்பட்டது