பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ensin theirGün gemenorGaußstrira; g. shii. Iz: விரும்பினார் 801 பெயர், பட்டியலில் இருந்து விடுபட்டது. இரவு ஒன்பதரை மணிக்கு இச் செய்தி எனக்குத் தக்கவர் மூலமாக வந்தது. நம்பி மோசம் போனேன். -- அனைவரிடமும் விடை பெற்றேன் 31-7-1975 அன்று வழக்கம்போல் காலை 8% மணிக்கே அலுவலகம் சென்றடைந்தேன். வழக்கம்போல் எவ்விதச் சலனமுமின்றிப் பல்கலைக் கழகத்துக்குச் சென்றிருந்தேன். புதிய துணைவேந்தர் வருகிறார் பதிவாளரை அழைத்து, “புதிய துணைவேந்தராக டாக்டர். மால்கம் ஆதிசேசய்யா வருகிறார். இத் தகவலைச் சிலமணி நேரங்களுக்குக் கிணற்றில் போட்ட கல்லாக வைத்திருங்கள். ஆளுநரிடம் இருந்து தகவல் வந்ததும், சேப்பாக்கம் வளாகத்திலும், கிண்டி வளாகத்திலும் உள்ள எல்லாத் துறைகளுக்கும் சென்று ஆதாரப் பணியாளர் முதல் பேராசிரியர்வரை தனித்தனியே விடைபெற்றுக் கொள்கிறேன். அப்போது என்னுடன் வருவதற்கு ஆயத்தமாய் இருங்கள்” என்று கூறியனுப்பினேன். பிற்பகல் இரண்டு மணிக்குத் திரு. பத்மநாபன், - ஒய்வுபெற்ற மாநகராட்சிப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் - என்னைப் பார்க்க அலுவலகம் வந்தார். காக்க வைக்காமல் பேட்டி கொடுத்தேன். பத்மநாபன் அறைக்குள் நுழைந்ததும், “என்ன, அநியாயம் பண்ணி விட்டீர்களே?” என்று கூறியபடியே கண்ணிர் வடித்தார். தேம்பித்தேம்பி அழுத அவரைத் தேற்றுவது பெரும்பாடாகி விட்டது. அவர் விடைபெற்றுக் கொண்டதும், பதிவாளரை அழைத்தேன். அவர் என்னுடன்வர, மற்றவர்களிடம் விடை பெற்றுக்கொள்ள வேண்டி, ஒவ்வொரு துறைக்கும் சென்றேன். வருபவருக்கு ஒத்துழைப்புத் தாருங்கள் உடல் வேதியியல் துறைக்குள் நுழைந்ததும், துறைத்தலைவர் திருமதி. சண்முக சுந்தரம், பக்கத்திலிருந்த ஒரு மாணவரிடம் ஒரு பெரிய பூமாலையைக் கொடுத்து எனக்குச் சூட்டச் செய்தார். “நான் பதவியிலிருந்து விலகப்போகிறேன். வரப்போகிறவருக்கும் எனக்குக் கொடுத்ததுபோல் ஒத்துழைப்பைத் தாருங்கள்” என்று புன் முறுவலோடு கூறினேன். அந்த அம்மையார் வியப்பால் பேச முடியாது நின்றார். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/820&oldid=788662" இலிருந்து மீள்விக்கப்பட்டது