உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800– நினைவு அலைகள் தேர்வுக்குழு அமைந்தது உரிய நேரத்தில், பல்கலைக் கழக ஆட்சிக் குழு டாக்டர். சந்திரன் தேவநேசனையும், பேரவை திரு. டி. எம். நாராயணசாமிப் பிள்ளையையும் தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமித்தது. இருவர் பெயர்களும் அரசின் பரிந்துரைகள். 18-7-1975 அன்று இணைவேந்தரைப் பேட்டி கண்டபோது, மாண்பமை நீதிபதி இராமசாமியை ஆளுநர் சார்பில் நியமித்திருப்பதாக என் காதோடு காதாகக் கூறினார். இனி மாற்றத்தைத் தாம் கவனித்துக் கொள்வதாகவும் நான் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறிய நாவலர், முதலமைச்சரைக் காண்பதற்கு உரிய நேரத்தில் எனக்குத் தகவல் கொடுப்பதாகவும் இரகசியமாகக் கூறி அனுப்பினார். கோலாலம்பூர் சென்று வந்தேன் இதற்கு முன்னர், காமன்வெல்த் பல்கலைக் கழகங்களின் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராக என்னைப் பணிமூப்பு அடிப்படையில் நியமித்து இருப்பதாகவும், கோலாலம்பூரில் மே திங்கள் நடக்கவிருக்கும் அச் செயற்குழுக் கூட்டத்திற்கு வரும்படியும் எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று கோலாலம்பூர் சென்றேன். செயற்குழு பினாங்கு, ஆங்காங்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்குச் சென்று வந்தது. என் மதிப்பிற்குரிய நண்பர் திரு. எம். பி. தாமோதரன், துணைவேந்தர் நியமனம் பற்றிக் காற்று எப்படி வீசுகிறது என்பதை அவ்வப்போது எனக்குக் கூறிவந்தார். சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சிவஞானம் எனக்கு ஆதரவாக முயற்சி எடுத்துக் கொண்டார். நம்பி மோசம் போனேன்! அவ் விவகாரத்தில் எவரெவர் தன்னிலையைத் தாழ்த்திக் கொண்டார், எவரெவர் என்னை முதுகில் குத்தினார் என்பது ஆதார பூர்வமாக எனக்குத் தெரியும். இந்த இரகசியங்களை யெல்லாம் எழுதி எவருக்கும் சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை. 28-7-1975 அன்று மாலை, தேர்வுக் குழு கூடிற்று. இரண்டரை மணிநேரம் விவாதம் நீடித்தது. என் பெயரும் பட்டியலில் இடம் பெற வேண்டுமென்று நீதிபதி இராமசாமியும், டாக்டர். சந்திரன் தேவநேசனும் வாதாடினார்கள். இறுதியில் தோற்றார்கள். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/819&oldid=788660" இலிருந்து மீள்விக்கப்பட்டது