பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/818

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மீண்டும் துணைவேந்தராக ஜி. ஆர். டி. விரும்பினார் 799 திரு. கஸ்துாரிப் பிள்ளை மீண்டும் குறுக்கிட்டார். "நீங்கள் வேண்டிக்கொள்ள வேண்டுமா? உங்கள் சாதனைக்கு அரசு அல்லவா உங்களை அழைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு, அமைச்சராகிய தம் மகனிடம், இதை நீ விழிப்பாகக் கவனித்துக் கொள்” என்று கட்டளையிட்டார். மணியம்மையாரின் விருப்பம் - வீரமணி தகவல் நான் சென்னைக்குத் திரும்பியதும், திரு. கி. வீரமணி அவர்களோடு தொடர்பு கொண்டேன். அவர் நான் மீண்டும் துணைவேந்தராக வரவேண்டுமென்றும், அதற்கு ஆவன செய்வதாகவும் திருமதி. ஈ. வெ. ரா. மணியம்மையார் ஏற்கெனவே அப்படிக் கூறியிருப்பதாகவும் தகவல் கொடுத்தார். நாவலர் - கலைஞரைச் சந்தித்தேன் அதற்குப் பிறகு, பல்கலைக் கழக இணைவேந்தர் டாக்டர். நாவலர் நெடுஞ்செழியனைக் கண்டேன். மூன்றாம் முறையும் என்னைத் துணைவேந்தராக நியமிக்கும்படி வேண்டிக் கொண்டேன். "நான் பார்த்துக் கொள்கிறேன். மரியாதைக்காக நீங்கள் முதலமைச்சரையும் ஆளுநரையும் பார்த்து விடுங்கள்” என்று அவர் ஆணையிட்டார். அப்படியே செய்தேன். முதலமைச்சர் டாக்டர். கலைஞர் கருணாநிதியைக் கண்டு வேண்டிக்கொண்டேன். அவர் வழக்கம்போல் புன்முறுவல் பூத்தார். ஆளுநரைப் பார்க்கும்படி அவரும் கூறினார். ஆளுநரையும் சந்தித்தேன் நான், கே. கே. வடிா அவர்களைக் கண்டு அவரிடம் வேண்டிக் கொண்டேன். ஆளுநர், “முதலமைச்சரும் கல்வியமைச்சரும் சொல்கிறபடி, நான் நியமனம் செய்ய வேண்டும். என் நல்லெண்ணம் உங்களுக்கு எப்போதும் உண்டு” என்று கூறி அனுப்பினார். நடந்தவற்றை இணைவேந்தர் டாக்டர் நாவலரிடம் தெரிவித்தேன். அவர் ஆணையிட்டபடி அவ்வப்போது அவரைக் கண்டு வந்தேன். தாம் உரிய நேரத்தில் எனக்குச் சொல்வதாகவும் அப்போது நான் முதலமைச்சரைக் காணலாம் என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் பரிவோடு பேசினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/818&oldid=788659" இலிருந்து மீள்விக்கப்பட்டது