உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B14 - நினைவு அலைகள் அவர் தியாக வாழ்க்கை வாழ்ந்ததால், நான் எனது அலுவலில் முன்னர்க் காணாத - நம்ப முடியாத தொண்டினை ஆற்ற முடிந்தது. என் பணிச் சிறப்புக்கும் புகழுக்கும் வித்தாயிருந்தது காந்தம்மாவுடைய தோழமை. மாவட்டக் கல்வி அலுவலராக நான் இருந்தபோதும் பேருந்துகளில், மாட்டு வண்டிகளில், என்னோடு காடுமேடு எல்லாம் சுற்றிவந்து என் காரியங்களுக்குக் கை கொடுத்தார். இயக்குநர் நிலையில், காலை எட்டு மணி முதல் இரவு பதினோரு மணிவரை பட்டிதொட்டிகளெல்லாம் கல்விப் பணிக்காகச் சுற்றி வந்தபோதும் காந்தம்மா என்னோடு வந்தார். சளைக்காமல் பயணம் செய்தார்; உதவி புரிந்தார். நான் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியபோதும் என்னோடு பல நிகழ்ச்சிகளுக்கு வந்து பங்கு கொண்டு என் கரங்களைப் பலப்படுத்தினார். - காந்தம்மா கடுமையான நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்திலும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தபடியே என் நலன்களை முழுமையாகப் பேணினார். காந்தம்மா பல துன்பங்களுக்கிடையில் - நோய்களுக்கு இடையில் - எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பொறுமையாக வாழ்ந்ததும், எனக்காகத்தான். உதவியாளனாக இருந்தேனா? முழுமையாகவும், உண்மையாகவும் எல்லா வகையிலும் எனக்குத் துணையாக வாழ்ந்த காந்தம்மாவுக்கு நான் நல்ல கணவராய் இருந்தேனே ஒழிய, நல்ல உதவியாளனாக இருந்தேனேன்று சொல்ல இயலாது. 1981 ஆகஸ்ட் திங்களில் காந்தம்மா கடுமையான நோய்க்கு ஆளான பிறகுதான் அவருடைய உடல் நலத்தை - அதற்காக ஆற்ற வேண்டிய உதவிகளைப் பற்றி நான் சிந்திக்கவும் செயல்படவும் முற்பட்டேன். அவரது 44 ஆண்டுத் தொண்டுக்குக் கைம்மாறாக நான் ஆற்றியது மூன்றாண்டு கவனிப்பும் உதவியுமே. = காந்தம்மாவின் பல்வகைப் பணி 'பிறர்க்கு என முயலுநர் உண்மையானே உலகம் வாழ்கிறது’ என்பதை மெய்ப்பித்துக்கொண்டு வாழ்ந்தவர் காந்தம்மா, பதவிகளை ஏற்காவிடினும் தொண்டுகள் பலவற்றை ஆற்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/833&oldid=788676" இலிருந்து மீள்விக்கப்பட்டது