பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி காந்தம்மாள் என்னை விட்டுப் பிரிந்தார் 815 சிறப்புப் பெற்றவர் காந்தம்மா. சென்னை வேப்பேரி பாலர் பவன் பள்ளிக்கு ஆட்சிக் குழுத் தலைவராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். திருவல்லிக்கேணி என். கே. திருமலாச்சாரியார் தேசியக் கல்வி நிலையங்களின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பல்லாண்டுகள் கல்வித் தொண்டாற்றினார். மாநிலச் சிறுவர் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல் வீராங்கனையாகத் தொண்டு புரிந்தார். மாநிலப் பெண்கள் சாரணிய இயக்கத்தின் தலைமைச் செயலக ஆணை யராகச் சிறப்புப் பணி புரிந்தார். அமைதியான தொண்டாற்றிப் பழுத்த பழமாக மறைந்த காந்தம்மாவை என் சொல்லிப் போற்றுவேன். காந்தம்மா இல்லாத உலகம் எனக்குப் பாலைவனமே. சாந்தம்மா மறைந்த அன்று மாலை ‘இனி எப்படி வாழப் போகிறோம்?’ என்ற எண்ணம் எழுந்தது. தம்பி மகன் குடும்பம் என் உதவிக்கு வந்தது என் நேர் இளவல் நெ. து. சிவானந்தத்தின் ஒரே மகனான லெனின் என் முன் தென்பட்டான். அவனைக் குடும்பத்தோடு என் வீட்டில் வந்து தங்கி என் வாழ்நாள் முழுவதும் என்னைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டேன். அவன் சற்றும் தயங்காது உடனே இசைந்தான். சிறிது நேரத்திற்குப்பின், அவன் மனைவி திருமதி. விசயலட்சுமியும், அவனுமாக வந்தனர். முன்னர் கணவர் மட்டும் கொடுத்த வாக்குறுதியை விசயலட்சுமியும் சேர்த்து மீண்டும் உறுதிப்படுத்தினர். அப்படியே இருவரும் குடும்பத்தோடு வந்து தங்கி என்னோடு வாழ்ந்து வருகிறார்கள். துரைசாமிக்குக் காந்தம்மாவிடம் பாசம் அவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூவரும் என் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களின் மூத்தவனாகிய லெ. துரைசாமியை ஒன்றரை வயதுக் குழந்தையாயிருக்கும்போது காந்தம்மாவுக்குக் காட்டுவதற்காக நெய்யாடுபாக்கத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வீட்டில் இரண்டு நாள் தங்கிய பிறகு பெற்றோர் ஊருக்குத் திரும்பியபோது பெற்றோரோடு செல்ல துரை மறுத்து விட்டான். பாட்டி காந்தம்மாவோடு தங்கி விட்டான். அவனுக்குக் காந்தம்மாவின் பேரில் உயிர். காந்தம்மாவுக்கும் அவன் பேரில் உயிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/834&oldid=788677" இலிருந்து மீள்விக்கப்பட்டது