பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 நினைவு அலைகள் லெனின் குடும்பம் என்னோடு வந்து தங்கியிருப்பதால் என்னைப் பார்த்துக் கொள்ளத் தக்கவர்கள் கிடைத்தார்கள். அந்த உதவிக்கு உதவியாக நின்ற தம்பி சிவானந்தத்ததுக்கு எப்படி நன்றி சொல்வேன். o என் தம்பியர்கள் மூவருமே என்பால் அன்புடையவர்கள். என்னை மதிப்பவர்கள். அவர்களில் சிவானந்தம், என்னுடைய பரதன் ஆக இருந்தார் என்றால், அது மிகையல்ல. தம்பி சிவானந்தம் காலமானார் சிவானந்தம் 4-12-1986 அன்று என் இல்லத்தில் வந்து தங்கியிருந்தபோது இயற்கை எய்தினார். அந்த அதிர்ச்சியும், வேதனையும் இன்றும் சூடு தணியவில்லை. துன்பத்தின் செறிவே மானிடர் தம் வாழ்க்கை போலும்! நெய்யாடுபாக்கத்தில் பயிர்த்தொழில் பார்த்து வந்த அவர் 1986இல் சென்னைக்கு வந்தார். சிறிய அறுவை மருத்துவம் செய்து கொள்ள அதற்குத் தேவையான பணத்தோடு வந்தார். சென்னையில் மருத்துவ சோதனை நடந்தது. பெரிய அறுவை தேவைப்படுவதாகப் புலனாயிற்று. -- அதற்கு அதிகப் பணம் தேவை. இது அவரது மகன் லெனிலுக்கும் மருமகள் விசயலட்சுமிக்கும் தெரிந்தது. சிறிதும் தயங்காது அவரிடம் சென்றார்கள். 'மாமா பணத்தைப் பற்றிக் கவலைப் படாதீர்கள் உங்களைக் குணப்படுத்தச் சொத்தெல்லாம் செலவு செய்யவும் யோசிக்க வேண்டாம். நீங்கள் உடல் நலம் பெற்றால் போதும். உங்கள் பேரக் குழந்தைகள் மூவரையும் உங்கள் மகன் எப்படியாவது காப்பாற்றி விடுவார். உங்கள் மருத்துவத்திற்குச் செலவு செய்துகொள்ளத் தயங்காதீர்கள்” என்று விசயலட்சுமி சொன்னார். சிவானந்தத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அறுவை மருத்துவம் பார்த்துக் கொண்டார். ஒரு குறையும் இல்லாமல் த்ாராளமாகச் செலவு செய்தார்கள் லெனின் தம்பதிகள். கையிருப்புக்குப் பல மடங்கு செலவு செய்தார்கள். மூன்று திங்கள் ஓடின, நிதி ஒடியது: உயிரும் ஒடியது. சிவானந்தம் மறைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/835&oldid=788678" இலிருந்து மீள்விக்கப்பட்டது