உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் மனைவி காந்தம்மாள் என்னை விட்டுப் பிரிந்தார் == 817 அதற்குமுன் தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கையில், சிவானந்தம் மகனையும் மருமகளையும் அழைத்தார். “எனக்கு ஏதாகிலும் ஆகிவிட்டால், என் உடலை ஊருக்கு எடுத்துக்கொண்டுபோக வேண்டாம், அம்மா” ங்கி H ཟ། རྐ། ། ஏன்? "உன் பெரிய மாமா, வீட்டிற்குள் நடமாடவும் மற்றவர் உதவியைத் தேடும் நிலையில் உள்ளார். அப்படிப்பட்ட நிலையில் என்னோடு நீங்கள் ஊருக்கு வந்து விட்டால், அவர் எப்படிச் சமாளிப்பார்? அவரைப் பார்த்துக்கொள்ள எவரும் இன்றித் தவிக்கலாமா? “என்னைச் சென்னையிலேயே எரியூட்டினால், அண்ணனுக்கு இடையூறு ஏதும் இராது” என்று கட்டளையிட்டார். இருவரும் அப்படியே செய்து விட்டார்கள். என்னையும் பார்த்துக் கொள்ளுகிறார்கள். குடும்பத்தைப் பற்றி நினைக்காமல் பணியிலேயே மூழ்கிக் கிடந்தாலும், குடும்பப் பொறுப்புக்கு வேண்டியதைச் செய்வதற்குக் காந்தம்மாவுக்கு முழு உரிமையும், நிதியும் கொடுத்திருந்தேன். காந்தம்மா ஒன்றாகவே கருதினார் காந்தம்மாவும் தன் உறவினர், என் உறவினர் என்று பாகுபாடு பாராட்டாமல் ஆதரித்து வந்தார். காந்தம்மாவின் தகப்பனார் சுப்பிரமணியம், அக்காள் குஞ்சிதம், அத்தான் குருசாமி, தங்கம்மாள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டார்கள். ஆனால், காந்தம்மா தன் அக்காவின் குழந்தைகள் ரஷ்யா, கெளதமன் ஆகியோரைத் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே நடத்தி, பல்லாண்டுகள் பராமரித்து வந்தார். ரஷ்யாவின் திருமணத்தையும் கெளதமன் திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்து மகிழ்ந்தார். அதற்குப் பிறகும் ரஷ்யாவையும் அவரது குழந்தைகளையும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஏற்று நடத்தி வந்தார். எவரிடமும் பொருள் உதவி பெற்றதில்லை என் வாழ்நாளில் நான் எந்த உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ பொருள் உதவி பெற்று வாழ நேரிட்டதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/836&oldid=788679" இலிருந்து மீள்விக்கப்பட்டது