பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

818 நினைவு அலைகள் என் காலிலேயே நின்று வந்திருக்கிறேன். என் வாழ்க்கை எளிமையாக அமைந்ததால் நான் என் காலிலேயே நிற்க முடிந்தது.

  • . முன்னர்க் குறிப்பிட்டபடி, மாமனாரோடு குத்துாசியாரும்,

நானும் ஒன்றாகக் குடி இருந்து, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போதிலும், குருசாமியாருடைய செலவிலோ, மாமனார் வீட்டுச் . செலவிலோ நான் வாழ நேரிடவில்லை. --- குடும்பச் செலவுக்கு எந்தக் காலத்திலும் என் பங்குக்குமேல் பணம் கொடுத்து வந்தேன். நான் யாருக்கும் எந்தச் சுமையையும் வைக்கவில்லை. மாறாக, நானே அளவுக்கு மீறிய சுமையை நெடுங்காலம் - ஏன், அண்மைக்காலம் - வரை ஏற்றுக் கொண்டிருந்தேன். 100 என் கடன் பணி செய்து கிடப்பதே! ஊக்க தானம் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே. இக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நான் நாற்பதாண்டு காலம் ஊதியம் பெறும் தொழில் புரிந்துவிட்டேன். மீதமுள்ள நாள்களில் தொண்டு செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. உயர்நிலைப் பள்ளிதோறும் சென்று மாணவர்களுக்கு உரையாற்றிப் படியுங்கள் கவனமாகப் படியுங்கள், கருத்தாகப் படியுங்கள்; ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறும் தரத்திற்குப் படியுங்கள்’ என்று அறிவுரை கூறி ஊக்கப்படுத்த எண்ணினேன். சென்னை மாநகரில் இதை வெள்ளோட்டம் பார்க்கக் கருதினேன். இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினேன். i ■ “நெ. து. சு. அரசுக்கு ஆகாதவன், அவரை அழைத்தால் அரசு கோபப்படுமோ?” என எண்ணி அஞ்சினர். ஆகவே ஊக்க தானம் கொடுக்க நினைத்தது பலிக்கவில்லை. இந்திய-சோவியத் நட்புறவை வளர்த்தேன் இந்திய சோவியத் கலாசாரக் கழகத்தின் மாநிலக் குழுவிற்குத் தலைவனாக 1972 சூனிலேயே என்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத் தார்கள். அடுத்தடுத்து ஒவ்வொரு முறையும் என்னையே தேர்ந்தெடுத்து என்பால் உள்ள நம்பிக்கையைக் காட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/837&oldid=788680" இலிருந்து மீள்விக்கப்பட்டது