பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடன் பணி Cloting கிடப்பதே! 819 கொள்கிறார்கள். நான் பொது மக்களுக்குத் தொண்டாற்ற இவ் வியக்கம் நல்ல வாய்ப்புகளைக் கொடுக்கிறது. பொதுக்கல்வி இயக்குநராகப் பட்டிதொட்டியெல்லாம் சுற்றிவந்து கல்வியை வளர்த்ததுபோல, இவ் வியக்கத்தின் சார்பில் மீண்டும் ஊர்தோறும் சென்று பொதுக் கூட்டங்களில் பேசி, இந்திய - சோவியத் நட்புறவை வளர்த்தேன். அவ் வகையில்தான் நான் பெரிதும் நாட்டிற்குப் பயன்பட்டு வருகிறேன். இந்திய சோவியத் நட்புறவு இயற்கையானது; இரு தரப்பிலும் ஆழ வேரூன்றியிருப்பது. இந்தியாவிற்குப் பேருதவிகளைப் பெற்றுத் தருவது 1971இல் பாகிஸ்தான் போர் நடந்தது. போர் தொடுத்தபோது சோவியத் நாடு விரைந்து வந்து உதவிற்று. பல்வகைப் பொருளாதார உதவி செய்வதோடு. பாதுகாப்புக் கேடயமாகவும் விளங்குகிறது, சோவியத்நாடு. எனவே இவ்வுறவைப் பேணிக் காத்து வளர்ப்போமாக இந்தியா முழுவதும் 2500 இந்தியா - சோவியத் கலாசார கழகங்கள் உள்ளன. அவற்றில் 250 கிளைகள் தமிழ்நாட்டில் உள்ளன. சென்ற பத்தாண்டுகளில் இவ் வளர்ச்சி ஏற்பட்டது. இதை மேலும் வளர்ப்போமாக. இஸ்கஸ் கூட்டங்களை இந்திய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கப் பயன்படுத்தி வருகிறேன். இஸ்கஸ் இதழுக்குக் கட்டுரைகள் இவ் வியக்கம் கடந்த ஆறாண்டுகளாகத் திங்கள் தோறும் வெளியிடும் இஸ்கஸ்" இதழுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன். "அறிவு வழி சிறப்பாசிரியர் சென்னையிலிருந்து கே. பஞ்சாட்சரம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் அறிவு வழி என்னும் மாத இதழுக்குச் சிறப்பாசிரியராக உள்ளேன். திங்கள்தோறும் தலையங்கம் எழுதுகிறேன். சில ஆண்டுகள் அதற்குச் சிறப்புக் கட்டுரைகளும் எழுதி வந்தேன். + 'சத்திய கங்கை"யில் – 'நினைவலைகள் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் சத்திய கங்கை மாதம் இருமுறை இதழில் நினைவு அலைகள்' என்ற தலைப்பில் என் வரலாற்று அலைகளை எழுதி முடித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/838&oldid=788681" இலிருந்து மீள்விக்கப்பட்டது