பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கடன் பணி செய்து கிடப்பதே! B21 தலைநகரிலும் அரசு பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தது. அவ் விழா ஒவ்வொன்றிலும் எனக்கும் பங்கு கொடுத்து முதலமைச்சர் எம். ஜி. ஆர். என்னைப் பெருமைப் படுத்தினார். பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் துரண் நிறுவப் பட்டது. அதற்கான, விழாக்களிலும் எனக்கு இடம் கொடுத்துச் சிறப்பித்தது தமிழக அரசு. பெரியாரின் வாழ்க்கை வரலாறு எழுதினேன் பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறுவர்களுக்கேற்ற வண்ணப் படங்கள் வாயிலாக வெளியிடுவது என்றும், பெரியோர்களுக்காக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் வெளியிடுவது என்றும், "பெரியாரின் புரட்சி மொழிகள்’ என்ற நூலினைத் தொகுப்பதென்றும் முடிவு செய்யப் பட்டது. அதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக் குழுவின் தலைவர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். அக் குழுவின் துணைத்தலைவராக அரசு என்னை நியமித்தது. வண்ணப் பட நூலையும், முழு வரலாற்றையும் தொகுக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தது. வண்ணப் படநூலையும், வரலாற்றில் முதல் பாகத்தை 300 பக்கங்களுக்கு மேலும் எழுதி முடித்துக் கொடுத்தேன். தம்முடைய பல அலுவல்களுக் கிடையிலும் நாவலர் நேரத்தை ஒதுக்கிவைத்து நான் தொகுத்த நூல்களிரண்டையும் வரி வரியாகப் படித்துப் பார்த்து வெளியிட ஒப்புதல் அளித்தார். 1984 ஏப்ரலில் ஏற்கப்பட்ட அவ்விரு நூல்களும் வெளியாகுமென்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன் பெரியார் வரலாற்றின் இரண்டாவது பகுதியையும் முடித்துச் கொடுத்திருக்கிறேன். பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டேன் சில இளம் நண்பர்களுடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் தேர்தலுக்குப் போட்டி யிட இசைந்தேன். அத் தொகுதிக்குச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரவையின் இந்து உறுப்பினர்களே, வாக்காளர்கள் ஆவர். . காலியிடங்கள் இரண்டு. போட்டியிட்டோர் ஐவர். ೩ಅ. கட்சியின் ஆதரவை நாடிச் சிலர் முயன்றனர். முதலமைச்சர் நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/840&oldid=788684" இலிருந்து மீள்விக்கப்பட்டது