உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 நினைவு அலைகள் ஒரு வேட்பாளன் என்று அறிந்ததும் கட்சியின் முதல் ஆதரவு எனக்கு என்றும், இரண்டாவது வாக்கு திரு. ஐசரிவேலனுக்கு என்றும் முடிவு எடுத்தார். நான் கட்சியின் சார்பில் நிற்பதாயிருந்தால், ஐசரிவேலனுடன் சேர்ந்து கூட்டு வேண்டுகோள் விடலாமென்றும் திசை காட்டினார். கட்சி சார்பற்றே நின்றேன் நான் கட்சிச் சார்பற்றுச் சுயேச்சையாகப் போட்டியிட விரும்பினேன். அதற்கு முதலமைச்சர் இசைந்தார். இருப்பினும் அரசுக்குக் கட்டுபட்டவர்களையெல்லாம் எனக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்தார். தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணுவதற்கு முன் உயர்நீதி மன்றத்தில் இரு வழக்குகள் த்ொடரப்பட்டன. அதனால் (ԼԲւգ-նվ தெரிய ஒராண்டுக்கு மேலாகி விட்டது. இறுதியில், முடிவு அறிவிக்கப்பட்டபோது எனக்கே மிக அதிக வாக்குகள் கிடைத்தது புலனாயிற்று. பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினர்களில் இரண்டொருவரைத் தவிர மற்றவர்களெல்லாம் எனக்கு வாக்களித்தது எனக்கு மனநிறைவைத் தந்தது. பச்சையப்பன் அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக என்னைக் கொண்டு வர முதலமைச்சர் விரும்பினார். உறுப்பினர் பணிமூட்பு அடிப்படையில் தலைவரைத் தேர்ந்தெடுத்தல் அதற்குள்ள மரபு. எனவே, அது பலிக்கவில்லை. 'மன்றம் இதழ்த் தொடக்க விழாத் தலைமை டாக்டர். நாவலர். நெடுஞ்செழியனைச் சிறப்பாசிரியராகக் கொண்டு மன்றம்’ என்ற வார இதழ் மறு பிறவி எடுத்தது. மன்றத்தின் தொடக்க விழாவில், முதலமைச்சர் மாண்புமிகு. டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் பங்கு கொண்டார். நிகழ்ச்சி நிரலை அவரைக் கேட்டே உருவாக்கினார்கள். முதலமைச்சர் “நெ. து. சுவை, விழாவுக்குத் தலைமை தாங்கும்படி அழையுங்கள்” என்று கட்டளையிட்டார். முதலமைச்சரே அப்படி என்னை அழைக்கச் சொன்னதைச் சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு க. இராசாராம் என்னிடம் கூறி ஒப்புக் கொள்ளச் சொன்னார். ஒப்புக் கொண்டேன். விழாவின்போது, “நான் எந்த அரசியல் கட்சிச் சார்பும் அற்றவன். இருப்பினும் என்னை இவ் விழாவிற்கு அழைக்கும்படி ஆணையிட்ட முதலமைச்சருக்கு எப்படி நன்றி சொல்வதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/841&oldid=788685" இலிருந்து மீள்விக்கப்பட்டது