பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனுற வாழ்ந்தேன் B23 தெரியாது திகைக்கிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டு அடக்கமாக உரையாற்றினேன். முதல்வர் எம். ஜி. ஆரின் பாராட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் உரையாற்றுகையில் “நெ. து. சு. அரசியல் கட்சிச் சார்பற்றவரே ஒழியக் கொள்கைச் சார்பற்றவரல்ல. அவர் சமத்துவவாதி என்பதும் நாடறிந்த தகவலாகும்” என்று எனக்கு முத்திரை குத்தினார். அதைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன். அரசியலில் ஒதுங்கியுள்ளேன் நான் முதல் முறை துணைவேந்தராக ஆனதும் சென்னை மாநகரக் கல்லூரி மாணவர்கள் சார்பில் திரு. ஜனார்த்தனம், தி.நகர் வாணி மகாலில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவுக்கு மாண்புமிகு எம். ஜி. ஆர் வந்திருந்து கடைசிவரை இருந்து என்னை வாழ்த்தி உரையாற்றினார். அவர் காட்டிய அன்புக்கு நன்றி உடையேன். - - ஊதியம் பெறும் அலுவலை ஏற்றுக் கொள்வதாயிருந்தாலோ அல்லது அரசியல் சார்புடைய பணியில் தொண்டாற்றும் பக்குவம் பெற்றிருந்தாலோ முதலமைச்சர் என்னைப் பயன் படுத்திக் கொண்டிருப்பார். இக் கால அரசியல் அரங்கிற்கு வேண்டிய பக்குவம் எனக்கின்மையால் நான் ஒதுங்கி இருக்கிறேன். வேறு இயக்கங்களில் நேரடி ஈடுபாடு கொள்ளாதிருப்பதும் அதே காரணத்தால்தான். 101. பயனுற வாழ்ந்தேன் 12-10-1988 அன்று எழுபத்து ஏழாவது வயதில் அடியெடுத்து வைக்கும் நான், திரும்பிப் பார்க்கிறேன். பள்ளிகள் இல்லாத பாரதமும் தமிழகமும் மனக்கண்களில் தோன்றுகின்றன. மெல்ல மெல்ல நகர்ந்து, பள்ளிகள் நிறைந்த நாட்டையும் மாநிலத்தையும் காணமுடிகிறது. சாண் எறி முழம் சறுக்கும் நிலையும் நினைவுக்கு வருகிறது. கற்பிக்கும் வசதிகள், குறைவாக இருப்பதால், பள்ளியில் சேர்ந்தோர் பலர் தேர்ச்சியில் தவறுவது ஓயாத தொல்லையாகத் தொடர்கிறது. தேக்கம் நீக்கம் என்னும் நோய்களால் நலிவுற்ற கோடிக்கணக்கான இந்தியச் சிறுவர்களும் சிறுமிகளும் அய்ந்தாம் வகுப்பு முடியவும் படிப்பைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/842&oldid=788686" இலிருந்து மீள்விக்கப்பட்டது