பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 நினைவு அலைகள் தொடர்வதில்லை. எனவே, எழுத்தறியாமை என்னும் இழிவு நம் நிழலெனத் தொடர்கிறது. முதியோர் எழுத்தறிவு இயக்கம் அண்மைக் காலத்தில் கவனம் பெடிகிறது. நாட்டுப் பற்றுடையோர் அனைவரும் நாட்டஞ்செலுத்.ே எல்லோரையும் எழுத்தறிவு பெற்றவர்களாக உயர்த்துவார்களாக! தொடக்கப் பள்ளிகள் எண்ணிக்கையில் பெருகியது போன்றே, நடுநிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவையும் பன்மடங்கு பல்கியுள்ளன. பல நூற்றாண்டுகளின் கல்வி வறட்சியை இரண்டொரு தலைமுறைகளில் சாதிக்க முயலும் எந் நாட்டிலும் தொல்லைகளும் குறைகளும் மிகும். தனிக்கவனம் செலுத்த இயலாமையால், முதல் தலைமுறைப் படிப்பாளிகள் படிப்பில் தயங்குவதும் மயங்குவதும் இயற்கை. இவற்றைப் பொருட்படுத்தாது தன்னம்பிக்கையோடு, கல்வி வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இந்தியா தொடர்ந்து நடைபோடுவது நிறைவைக் கொடுக்கிறது. மக்களாட்சிக்கு மக்கள் ஈடுபாடு அடிப்படைத் தேவை. மக்கள் கல்விக்கு மக்களின் ஈடுபாடு இன்றியமையாதது. சாதாரண குடிமக்களைக் கொண்டே சாதாரண பள்ளிகளைச் சீரமைப்பதே, பொது மக்களின் ஈடுபாடு, ஆதரவு முதலியவற்றைப் பெறும் உபாயம். பொதுமக்களிடம் வரிவாங்கி, பள்ளிகளைச் செப்பனிடும் போது, இது நம் கல்வி நிலையம் என்னும் உணர்வைச் சராசரி மனிதனிடம் சுரக்க வைப்பது அரிது. மாறாக, அந்தந்த ஊரில் பலருடைய நன்கொடையாலோ, முயற்சியாலோ கட்டப்பட்ட பள்ளியிடம் பற்றை வளர்ப்பது எளிது. காந்தீய சுய ஆட்சி’ உணர்வில் ஊறியவர்கள் ஏராளமானோர் வாழ்ந்த காலத்தில், தமிழ் நாட்டில் பள்ளிச் சீரமைப்பு இயக்கம் தோன்றியதால், அது பரவி, வெற்றி பெற்றது. இந்தியக் கல்வி நிலையங்களின் வசதி நிலையை வளப்படுத்துவதற்கு, அத்தகைய இயக்கம் தொடர வேண்டும். நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள் பெருகியதால், முன்னர் மழைக்குக்கூடப் பள்ளியிலும் ஒதுங்காதவர்களின் வீட்டுப் பிள்ளைகள் எண்ணற்றோர், உயர் கல்வியில் ஆய்வுப் பட்டங்கள் பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளார்கள். ஆழ்ந்த கல்வியில் முளைத்து வளரும் உயர் கல்வி, நிலையான சமூக நீதிக்கு உறுதியாகும். மாணாக்கர் கவனச் சிதைவின்றி, ஒருமனப்பட்டுப் பயின்று, எல்லோரும் படிக்க முடியும் என்பதை மெய்ப்பிப்பார்களாக! 'எல்லோரும் கற்போம்; நன்றாகக் கற்போம்; ஒன்றாகக் கற்போம்” இவ்வூக்க ஒலிகள் நாட்டை நடத்துவனவாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/843&oldid=788687" இலிருந்து மீள்விக்கப்பட்டது