பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/844

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனுற வாழ்ந்தேன் B25 மனிதனுள் படிப்பாற்றலோடு, செயல் திறனும் மறைந்து கிடக்கிறது. அத் திறனையும் வளர்த்தல் கல்வி முறையின் கடமையாகும். மாணாக்கர், தனித்தனியாகவும் கூட்டாகவும் திட்டமிட்டு, பொறுப்பேற்று, பணிகளைச் செய்து முடிக்க, கல்வி நிலையங்கள் வழிவகை செய்தல் முறை. முற்காலத்தில் இருந்ததுபோல், எல்லாம் ஏட்டுக் கல்வியாக நின்றுவிடுவது தவறு. அதே நேரத்தில் குருவி தலைமேல் பனங்க்ாயை வைப்பதும் தவறு. படிப்போரின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றபடி செயற் கல்வி அமைவதாக! சிறுவர் களுக்குக் கைவேலையாக இருக்கட்டும். நடுநிலைப் பள்ளிப் பருவத்தில் கடின கைவேலையாக மாறட்டும். உயர்நிலை, ம்ேனிலைப் பள்ளிகளில் இலகுவான தொழில்களாகட்டும். அதற்குமேல், தொழிற் பயிற்சியாக இருக்கட்டும். முதல் பத்தாண்டுகள் வரையிலாவது, சூடபுத்தியுள்ளோர். "மெத்தாதிகள்’ என்று கற்போரைத் தரம் பிரிக்காமல் இருப்போமாக! எல்லார்க்கும் ஒரே வகைக் கல்விக்கு ஏற்பாடு செய்வோமாக! பள்ளிக் கூடமே இல்லாத ஊரில் பிறந்த நான், படித்து, முதுகலைப் பட்டம் பெற்றது, என் திறமையாலும், முயற்சியாலும் மட்டும் விளைந்ததல்ல. காலத்தின் சூழலும் உதவிற்று. சமுதாய எழுச்சிக் காற்று, படிப்பார்வத்தைத் தந்தது. பெரும் பதவிகளை இந்திய மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கை வென்றதால், ஒரு காலகட்டத்தில் வெள்ளையருக்கே ஒதுக்கப் பட்டிருந்த இயக்குநர் பதவி, இந்தியனுக்குக் கிட்டியது. மொழி வழி மாநிலம் அமைந்ததால் பொதுக்கல்வி இயக்குநராக நான் வர முடிந்தது. அப் பதவிக்கு வந்த முதல் தமிழன் நான் என்பது அனைத்துத் தமிழர்களுக்கும் பெருமை தருவதாகும். அவ்வரிய வாய்ப்பினை எப்படிப் பயன்படுத்திக்கொண்டேன்? நாட்டின் நலனுக்கு - நலிந்தோரின் நலனுக்குப் பயன்படுத்தினேன். இயக்குநர் பதவியைத் தந்த முதல்வர் காமராசர், எனக்கு முழுச் செயல். உரிமை வழங்கினார். அதைப் பளுவாகக் கருதாமல் செயற்கரிய செய்யும் வாய்ப்பாகக் கொண்டேன். என் நலன் மறந்து ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதைப் பின்பற்றி உழைத்தேன். கல்வி வள்ளல் காமராசரின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தேன். அவர், என்னையும் சமப் புகழுக்கு உரியவனாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/844&oldid=788688" இலிருந்து மீள்விக்கப்பட்டது