பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B25 நினைவு அலைகள் உயர்த்திய போதும், கோள் சொல்லாமல் கலகம் மூட்டாமல் பணிவோடு இயங்கினேன். எந்த நெருக்கடியிலும் சாதி சமய வேற்றுமை உணர்வோடு செயல்படவில்லை. எல்லோரின் நம்பிக்கைக்கும் உரிய நடுநிலை யாளனாக இயங்கினேன். எனவேதான், தந்தை பெரியார், சேலம் வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, 1972இல் வெளியிட்டுள்ள, எனது மணிவிழா மலரில், நமது வைஸ் சான்சவர்' என்ற தலைப்பில் எழுதிய வாழ்த்துரையில், "அவரது உத்தியோகச் சேவையில் எந்தவிதமான நேர்மைக் குறைவும், நாணயக் குறைவும் இல்லாமல் மிகமிகப் பரிசுத்தமாக இருந்து வந்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லக்கூடும். அவருக்கு இயற்கையான எதிரிகள் யார்? அவர்களது வசதி, வலிவு எவ்வளவு என்பதை யாவரும்அறிந்ததேயாகும். அப்படிப்பட்ட நிலையில் உத்தியோகத் துறையிலாவது, சொந்தத் துறையிலாவது, பொதுத் துறையிலாவது ஒரு சிறு குறையோ, குற்றமோ சொல்லப்படாத தன்மையில் வாழ்ந்து வந்து இருக்கிறார். அறிவுத் துறையில் பெரும் பகுத்தறிவுவாதியாகவும், சமுதாயத் துறையில் உண்மையாகவே சமதர்மவாதியாகவும் இருந்து வருகிறார். "ஜாதியில் சைவராயிருந்தும், எந்தத் துறையிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜாதி உணர்ச்சியைக் காட்டினார் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடந்து வந்திருக்கிறார் என்று. நான் சொல்லக்கூடும். o - “எனவே, அவரது தொண்டு நமக்கு என்றும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று என்னைப் பற்றி எழுதிப் பெருமைப் படுத்தினார். - பள்ளிகள் அமைக்கவும் பகல் உணவு அளிக்கவும் பள்ளிச் சீரமைப்பை நடத்தவும் பொதுமக்களின் முழு ஆதரவையும் பெற முடிந்தது. என்னுடன் அலுவல் பார்த்த பலநிலை அலுவலர்கள். உதவியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் எனக்கு அளித்த ஒத்துழைப்புக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன். நிர்வாகி என்கிற முறையில் என்னைக் கொண்டு சாதித்தது பெரிது. கொள்கையாளன் என்ற முறையில் நான் வெற்றி பெற்றேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/845&oldid=788689" இலிருந்து மீள்விக்கப்பட்டது