உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனுற வாழ்ந்தேன் B27 வெற்றி பெற்றேனென்றே சொல்லவேண்டும். சராசரி இந்தியனைவிட இருபது ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறேன். புத்தி தெரிந்த பருவத்தில் நான் கொண்ட குறிக்கோள் என்ன? நாட்டின் மரபுப்ப்டி நான், “உயர்ச்ாதிக்காரனாச’ப் பிற்ந்து விட்டாலும், சமத்துவ மனிதனாகவே வாழ்வேன்; மேலோர் கீழோர் என்று வேறுபடுத்த மாட்டேன்’ என்பது என்னுடைய குறிக்கோள். அந் நெறியினின்று ஒரிழையும் விலகவில்லை என்பதை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திக் கொள்கிறேன். 'உன்னை விற்காதே' - இது எனக்கு நானே இட்டுக்கொண்ட கட்டளை. அதையும் நிறைவேற்றி வருகிறேன். “ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்!” இது என் மூச்சு! இதற்கு இடையூறு வரவிடவில்லை. ‘இன்னா செய்தார்க்கும்'இனியவே செய்!” என்பது வள்ளுவ நெறி. அந் நெறியைப் பின்பற்றி வருகிறேன். தாயைக் காப்பதும் தாய்க்குப் பணிவிடை செய்வதும் தனயனின் கடமைகள் ஆகும். என் தாய்மொழியாம் தமிழைக் காப்பதும் அதை வளர்த்துப் பணி செய்வதும் என் கடமைகள். எங்கும் தமிழ் என்ற கொள்கையைக் கைவிடாது, பின்பற்றி வருகிறேன். கல்லூரிகளில் இளங்கலை, இளம் அறிவியல் நிலைகளுள் தமிழைப் பயிற்று மொழியாக்கப் பாடுபட்டேன். மொழி வழித் தமிழனான நான் நாட்டுவழி இந்தியன் இதில் தொய்வு ஏற்பட்டதில்லை. இந்திய ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சிந்தனையாலும் செயலாலும் பேணிவருகிறேன். நான் மானுடக் கடலின் சிறு துளி. இனவழி மனிதன் என்கிற நிலையிலிருந்தே பொது விவகாரங்களை மதிப்பிடுகிறேன். பொது ஊழியத்தில் பயனுற வாழ்ந்தேன். தனி வாழ்க்கையில் கொள்கை அடிப்படையில் இல்லறம் மேற்கொண்டேன். காந்தம்மாவும் துணை நின்றார். அன்பும் அறமும் இடையறாது நீடித்தது. விருந்தோம்பலுக்குச் சுணங்கவில்லை எங்களால் தன்மானத்தோடு வாழ முடிந்தது: செழுங்கிளை தாங்க முடிந்தது. தமிழ் மக்களுக்கு நான் என்ன சொல்ல? “வாழுங்கள்! மண்ணில் நல்ல வண்ணம் வாழுங்கள்! அறிவு தோய்ந்த வாழ்க்கை நடத்துங்கள்! பிறிதின் நோய் தன்னோய் போல் கருதும் பண்போடு வாழுங்கள்! கத்துண்டு வாழுங்கள்! பல்லுயிர் ஒம்பி வாழுங்கள்!” என்று செ1.1ல விழைகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/846&oldid=788690" இலிருந்து மீள்விக்கப்பட்டது