உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B2B நினைவு அலைகள் பெற்றோர்களே! படிக்க வையுங்கள். உங்கள் பெண்களையும் படிக்க வையுங்கள்; தட்டிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள், அச்ச மூட்டாதீர்கள். தன்னம்பிக்கை யூட்டுங்கள். வளரும் குழந்தைகளுக்கும் வளர்ந்துவிட்ட வயோதிகர் களுக்கும் அன்பே அதிகப்படியான தேவை. எனவே, உங்கள் மக்களிடம் அன்பு காட்டுங்கள். எவ்வளவு வேலைத் தொல்லைகள் இருப்பினும் நாள்தோறும் அவர்களுக்காகச் சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள். அவர்களோடு கலந்துரையாடத் தவறாதீர்கள். அவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். எல்லோரிடமும் பரிவு காட்டுங்கள். மனிதன் ஆயிரங்காலத்துப் பயிர். எனவே, அவனை வளர்ப்பதும் நெடுநாளைய பொறுப்பு: உங்கள் மக்களை அறிவாளர்களாக, வல்லவர்களாக, நல்லவர்களாக வளர்ப்பதிலும் பொறுமை காட்டுங்கள். வளரும் தலைமுறைகளுக்குக் கடமை உணர்வு, சுறுசுறுப்பு, சுணங்காமை, உதவும் பண்பு, படாடோப மின்மை, ஒழுங்கு, ஒழுக்கம், நன்னடத்தை முதலியவற்றைப் பொறுமையோடு கற்றுக் கொடுங்கள். அவர்கள், உலகத்தோடு ஒட்டி வாழக் கற்றுக் கொள்ளட்டும். நான் தமிழனென்று பூரிக்கிறேன். இந்தியனென்று பெருமைப்படுகிறேன். மக்கள் மாகடலில் கலந்தவன் என்று இறும்பூது எய்துகிறேன். காப்பாற்றுங்கள்! பயன் படுத்துங்கள்! தாய்மொழியாம் தமிழைப் பேணிக்காத்து வாழுங்கள்! எல்லாத் துறைகளிலும் பயன் படுத்துங்கள்! தமிழைப் பாடமொழியாக - நிர்வாக மொழியாக - ஆட்சி மொழியாக நீதிமன்ற மொழியாக - வழிபாட்டு மொழியாகப் பயன்படுத்துங்கள்! இணைந்த இந்தியா இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாகும். இத் துணைக் கண்டத்தில் நீண்ட நெடிய வரலாற்றில் நாற்பது ஆண்டுகளாகவே கண்டுவரும் புதுமை இது பெரும் நன்மை! o அணு ஆயுத யுகத்தில் பெரும் நாடுகளாக இயங்குவதே வலிமை சேர்க்கும். தன்னாட்சி தன்னாட்சியாகவே நிலைத்து நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/847&oldid=788691" இலிருந்து மீள்விக்கப்பட்டது