பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലബ്ര0 ബി.:് - B29 இந்தியா தன்னாட்சிக்குக் கொடுத்த விலை கொஞ்சமல்ல! புரிந்த தியாகங்கள் ஏராளம்! செந்நீர் சிந்திப் பெற்ற இந்திய விடுதலையைப் பேணிகாப்பது நம் கடமை. நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் குறுக்கே நிற்கும் சாதி சமயப் பற்றுகளை வீட்டோடு நிறுத்திவிட்டு, பொதுத் தொண் டாற்றுங்கள். அப்பற்றுகளை வெறியாகுமளவிற்கு வளர்த்து விடாதீர்கள். ‘நாடெங்கும் வாழக் கேடோன்றும் இல்லை’ என்பது நம் ஆன்றோர் வாக்கு. இதை நினைவு கூர்வோமாக! ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்து தானும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் புதிய நாகரிகம் உருவாகட்டும். நம் சமுதாயத்தில் எல்லோரும் ஒர்விலை, எல்லோரும் ஒர் நிலை’ என்ற மனப்போக்கு பரவவேண்டும். மனிதனை மனித னாகவே நடத்தும் பக்குவம் ஏற்பட வேண்டும். அந்த ஒருநிலைச் சமுதாயத்தை உருவாக்குவது இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்க உதவும். இதைக் கருத்தில் கொண்டு மனம், மொழி, மெய்களால் உண்மையாகப் பாடுபடுவோமாக! வாழ்க தமிழ்! ஒன்று படுக இந்தியா! அமைதி நிலவுக உலகெங்கும்! * எல்லோரும் வாழ்வோம்! ஒன்றாக வாழ்வோம்! நன்றாக வாழ்வோம்!

) :) :) :):
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/848&oldid=788692" இலிருந்து மீள்விக்கப்பட்டது