பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையும் நினைப்பும் அன்புள்ள தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! இந்தத் தொடக்க விழாச் சொற் பொழிவை நான் தான் ஆற்றவேண்டும் என்று கேட்டபோது, நான் சிலகாலமாக அதிகமாக எந்தப் பொதுக்கூட்டங்களிலும் பேசுவதில்லை; ஆகவே, இந்தக் கூட்டத்திற்கும் வர இயலாதவனா யிருக்கிறேன் என்று கூறினேன். ஆனால் எனது மாணவ நண்பர் மதியழகன் நான் வரத்தான் வேண்டுமென்று பிடிவாதம் செய்தார். நான் யோசித்தேன்; சரி என்று சம்மதம் தந்தேன். காரணம், நான் இந்த விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றுவதன் மூலம் ஒரு சில சந்தேக மான பிரச்சனைகள் அதுவும் என்னைப்பற்றி சிலர் கொண்ட சந்தேகமான பிரச்சனைகள்—தீரும். என்பதே யாகும். நான் பேச ஒப்புக்கொண்டு கொடுத்த தலைப்பு, “நிலையும் நினைப்பும்.” இன்று இந்தத் தமிழ்ப் பொதுப் பேரவையின் தொடக்க தொடக்க விழாவுக்குத் தலைமை வகிக்க இருந்த துணைவேந்தர் இரத்தின சாமி அவர்கள் சென்னைக்கு சற்று அவசரவேலை காரணமாகச் சென்றுவிட்டதால் நண்பர் மதியழ