பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 2 நிலையும் நினைப்பும் கன் தலைமை வகிக்கிறார். சென்னைக்கு சற்று அவ சர வேலை காரணமாகப் போகாமல் துணைவேந்தர் அவர்கள் இந்த விழாவுக்குத் தலைமை வகித்திருந் தால் என் நினைப்பு கட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக் கும். ஆனால் நண்பரின் தலைமையில் அந்தக் கட்டு தளர்த்தப்பட்டிருக்கிறது; நினைப்பை வானலோகம் வரை சஞ்சரிக்கவிடலாம். பல்கலைக் கழக விதியை மீறி அன்பு காரணமாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது சொற்பொழிவின் மூலம் சர்க்கார் இப்பொழுது சிந்தனைக்கு இட்டிருக்கும் கட்டுப் பாட்டைக் குலைத்துவிடுவேன் என்றோ, அல்லது எனது அரசியல் கருத்தை உங்கள் சொந்தமான கொள்கைக்கு மாறாக மனதிற்குள் புகுத்திவிடுவேன் என்றோ ஐயப்படத் தேவையில்லை. யார் ஐயங் கொண்டாலும், அச்சங்கொண்டாலும் தமிழ்ப் பொதுப்பேரவையின் உறுப்பினர்களாகிய நீங்கள் அஞ்சமாட்டீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தமிழ்ப் பொதுப் பேரவைப் பேச்சு மேடையை அரசியல் மேடையாக்கி, வகுப்பு வாதத்தை வாதத்துக்கழைத்து நாட்டுப் பிரிவினை யைப் பற்றிப் பேசி தொடக்க விழாவை நாட்டுப் பிரிவினை நாளாக மாற்றவேண்டும் என்ற நிர்பந்தத் தில் இல்லாதவன். கொஞ்ச நாளாக அரசியலி லேயே அலுப்புத் தட்டியவன் நான். அலுப்புக்குக் காரணமான அரசியலை உங்களது அச்சத்துக்குரிய பொருளாக மாற்ற மாட்டேன். சர்க்காரே சிந்தனைக்குத் தடைவிதித்தாலும் நமது கனம் கல்வி மந்திரி அவினாசிலிங்கம் அடிக்கடி தமது சொற்பொழிவிலே "அச்சம் தவிர்' என்ற