பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நிலையும் நினைப்பும் அவர்களை இடைவிடாகப் பிரசாரத்தால் திருத்த வேண்டும். அவர்களிடத்திலுள்ள வைதீகத்தை விரட்டி அடிக்க பகுத்தறிவை ஆயுதமாக உடைய மாணவப் படையினால் தான் முடியும். அந்தப் படையை இந்தப் பல்கலைக் கழகம் தான் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்ந்தது. மாண வர்களிடம் நான் கூற ஆசைப்படுகிறேன்: உங்க ளுடையப் பொறுப்பு பெரிது. கடைசியாக எல்லோ ராலும் கைவிடப்பட்ட கேசு (Case) உங்களிடம் ஒப் படைக்கப்படுகிறது, குணட் ப்படுத்துவீர்கள் என்ற நம் பிக்கையில். மூட நம்பிக்கையுள்ள மக்களைத் திருத்த டாக்டர்களால் முடியவில்லை; உத்தியோகஸ்தர்க ளால் முடியவில்லை; ஊராள்வோர்களால் முடிய வில்லை, அமைச்சர்களால் முடியவில்லை; கவிஞர்- களால் முடியவில்லை; ஒரு காலத்திலே ஆலமரத்தடி யில் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி, ஆராய்ந்தார்கள் என்று கூறப்படு கிற காலத்தில் கூடயாகத்தால் முடியவில்லை;வேதத் தால் முடியவில்லை; சித்தர்களால் முடியவில்லை; ரிஷி சிரேஷ்டர்களால் முடியவில்லை. ஒரு காலத்திலும் ஒருவராலும் முடியவில்லை, மனிதனை மனிதனாக்க, மனிதனிடமிருந்து மிருகத்தனத்தைப் பிரிக்க, மனி தனை தேவனுக்க, எண்ணத்திலுள்ள இருளப் போக்க, மனவளத்தை உண்டாக்க அவர் களால்; முடியாததை நீங்கள் முடிக்கவேண்டும்; அவர்களால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிக்கவேண்டும். நீங்கள் உங்கள் காரியத்தில் வெற்றி பெற இடைவிடாத பிரசாரம் செய்ய வேண்டும்; நீங்கள் கோபுர வாசலிலே உள்ள