பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நிலையும் நினைப்பும் யும் நினைப்பும், மக்கள் என்னைப்பற்றிக் கொண்ட நினைப்பும், நான் மக்களைப் பற்றிக் கொண்ட நினைப்பும்,நினைப்பால் மாறிய இருவர்களது நிலை யும் - இப்படி நான் "நிலை"-" நினைப்பு" என்ற இரு தொடர்களையும் பொருத்திப் பார்த்தேன். எனக்கு விசித்திரமாகப் பட்டது. எனவே "நிலையும் நினைப்பும்" என்ற தலைப்பிலேயே சற்று பேசலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு நாட்டின் நிலை அதன் நினைப்பை உரு வாக்குகிறது. உன்னத நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு உயர்ந்திருக்கும்; தாழ்ந்த நிலையில் உள்ள நாட்டின் நினைப்பு தாழ்ந்திருக்கும் அதாவது நிலை உயர்ந்திருந்தால், நினைப்பும் உயர்ந்திருக்கும். நிலை தாழ்ந்திருந்தால் நினைப்பும் தாழ்ந்திருக்கும். நிலைக் கேற்றபடி நினைப்பு இருக்கும். ஆனால் சில வேளை களில் நிலைக்கேற்றபடி நினைப்பு இருப்பதில்லை. மூன்றாவது அடுக்கு மேல் மாடியில் உலவுகிற தொழிலாளியின் நினைப்பு அவன் நிலை உயர்ந்திருக் கிற அளவு உயர்ந்திருப்பதில்லை. மூன் றடுக்கு மாடி' வீட்டைக் கட்டிவிட்டு அவன் தாழ்ந்த குடிசைக்குள் குனிந்து நுழையும் பொழுது, அவன் பிறந்த வேளை மாளிகையில் வாழுகிறன்; நாம் வந்தவேளை குடிசையில் வாழுகிறோம்” என்றுதான் எண்ணிக் கொண்டு நுழைவான். மூன்றாவது அடுக்கு மாடி யில் நல்ல பொம்மைகள் அமைப்பான்; அந்தப் பொம்மைகளை அழகுபடுத்துவதில் வர்ண ஜாலத் தைக் காண்பிப்பான். பொம்மைகள் கலைத்திறனைப் பேசுகிற அளவுக்குத் தன் கைத்திறனை எல்லாம்