பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாத்துரை 5 செலவழிப்பான். இவ்வளவும் செய்துவிட்டு அவன் பேசாமல் குடிசைக்குள் குனிந்து செல்லுவான். தான் ஏன் மாடி வீட்டில் வாழக்கூடாது-ஒரு நிமிடமேனும் அதைப்பற்றி நினைக்கமாட்டான். காரணம் மாடிகள் கட்டி, மாடி ஏறப் படிக்கட்டுகள் அமைத்து, படிக்கட்டுகள் வழியாக மாடி ஏறினால் மனதைக் கவர அழகான பொம்மைகள் வைத்து, ஆபத்துக்கிடையே வெய்யிலால் நெற்றியில் வழியும் வியர்வையைப் பார்க்காமல் கஷ்டப்பட்டு கட்டிடம் கட்டியும் கடைசியில் அந்த உப்பரிகையில் உல்லாச மாக உலவப் போகிறவன் ஒரு சீமான்; அவனல்ல. இந்த உண்மையைத் தொழிலாளியும் அறிவான். மாடிப்படிக்கட்டுகளை கட்டும்பொழுது, அதன் வழி யாக ஏறி உலவப் போகிறவன் வேறொருவன்; தானல்ல என்பதைத் தெரிந்துகொண்டுதான் கட்டு வான். நிலைக்கேற்ற நினைப்பில்லை. திருட்டுத்தன மாகக் கனிதேடி மரம் ஏறியவனுடைய நினைப்பு எப்படியிருக்கும்? எந்த அளவுக்கு அவன் நிலை உயர்ந்திருக்கிறதோ அந்த அந்த அளவுக்கு அவன் நினைப்பும் தாழ்ந்திருக்கும். முதலில் கனி பறித்து, பிறகு அவசர அவசரமாகத் தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்து விடுவானோ, வந்து விட்டால் என்ன செய்வானோ என்ற பயத்தில் செங்காய் களைப் பறித்து, அதன் பின் காய்களையும் பறிப் பான். கனி பறிக்கையில் அவனது பாரத்தால் மரம் குலுங்கும்பொழுதெல்லாம் அவன் மனம் பயத்தால் குலுங்கும். அடிக்கடி தோட்டத்துக்குச் சொந்தக்காரன் வந்தால் எப்படிக் குதித்து எங்கு ஓடுவது என்று நினைப்பான். அவன் இருப்பது