பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 37 தவம் செய்வது, தவறா! என்று தன்னைத்தானே. கேட்டுக் கொள்கிறான். தண்டிக்க வந்த இராமனையும் கேட்கிறான். சம்புகன் : தரும சொரூபியே! தவம் செய்வது, குற்றமா? என் தலை மட்டும் வெட்டப்பட்டு விட்டால், கவலை கொள்ளேன், இராமா! தர்மத்தையே, வெட்டி வீழ்த்துகிறாயே, - தகுமா? இராவணனைக் கொன்றாய், இலங்கையை வென்றாய், என்று கூறினார்களே, அது பொய்! மன்னரின் பெருமை மங்கக் கூடாது என்பதற்காக, யாரோ, தந்திரசாலி கட்டிவிட்ட பொய்யாக' இருக்க வேண்டும். இராமா! நீ இராவணனிடம் தோற்றாய் - அவன் உன்னைத் தன் பெருந்தன்மையால், மன்னித்தான் - மணி முடியும் சுமந்து கொண்டிரு என்று சொன்னான்.- ஆம் அதுதான் நடந்திருக்கும் - இங்கு நீ, இராவணனுடைய பிரதிநிதியாகவே வந்திருக்கிறாய். இராமன்: சம்புகா! சித்த சுவாதீனமற்றவன் போலப் பேசாதே- சம்: பொய் அல்ல! அவன் தவத்தை அழிப்பவன் - இதோ நீயும் அதே வேலையை செய்ய வந்திருக்கிறாய் அவனாவது தவத்தை மட்டும் அழித்தான். நீயோ, தவம் செய்யும் என்னையே அழிக்க வந்தாய் - அவனுக்கு நீ பிரதிநிதிதானே!- பொய்யா - இரா : சம்புகா! இங்கு நான் தவம் கூடாது என்று கூறி நடத்தப்படும் தவங்களை எல்லாம் அழித்துக் கொண்டி ருக்கிறேன் என்றா எண்ணுகிறாய்? தவம் நடக்கிறது நான் அதனை ஆதரிக்கிறேன் - உதவியும் செய்கிறேன். சம் : இது, தவம் அல்லவா? இரா தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது - என் கோபம், தவத்தின் மீது அல்ல - அந்தக் குணம் அரக்கனுக்கு அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும்