பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அறிஞர் அண்ணா என்ற தர்மத்தைக் காப்பற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்ல நான். சம்: யோசியாமல் பொய் பேசுகிறாய் இராமா! கூசாது பேசுகிறாய். உன் ஆட்சியிலே, சிலருக்குத் தவம் செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய். இரா : தர்மம் - நானும் மீற முடியாத தர்மம். சம் : இதற்குப் பெயர் தர்மம்! அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம் செய்தனர்.- இராவணனே,பெரிய தவசி! அரக்கர் தலைவர்க ளெல்லாம், தவம் பல செய்து, வரம் பல பெற்றவர்கள். ஆகவே அவர்களும், தவம் என்றாலே வெறுத்து அழித்தவர்களல்ல - தவம் நாங்கள் செய்யலாம் - ஆரியர் செய்யலாகாது என்றனர்.- அழித்தனர் - நீயும், இங்கு ஆரியர் தவம் புரியலாம், அநாரியனான நான் புரிதல் தகாது, தலையை வெட்டுவேன் என்கிறாய் இலங்கையான் செய்தால் பாபம்! அயோத்தியான் அதே காரியத்தைச் செய்யும்போது அதற்குப் பெயர் ராஜ தர்மம்! இராமா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. இப்படிப்பட்ட அரசிலே வாழ்கிறோமே என்று சீக்கிரம், என் தலையை வெட்டிவிடும். வாதம் முடிந்தது, இராமனின் தண்டனை கிடைத்தது, வரம் வேண்டி தவம் செய்த சம்புகனுக்கு அவன் தலை தரையில் உருண்டது.] இராமன், தவச்சாலையை விட்டு நீங்கினான். இரத்தம் ஒழுகும் தலை! துடித்துத் துவண்ட உடல் காக்கை, கழுகுகள் வட்டமிடலாயின. வழிப்போக்கர்கள், இந்தக் கோரக் காட்சியைக் கண்டனர். அலறினர்.