பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் காட்சி - 8 51 இர இடம் : அறமன்றம் இருப்போர் :நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி தேவன். அக்னி தேவனே! புண்ணியத்தை நாடித்தானே யாகங்கள் செய்யப்படுகின்றன? அக்னி : ஆமாம். இரா : மனத்தூய்மைதானே மிக முக்கியம் யாக காரியத்திலே ஈடுபடுபவர்களுக்கு. அக்கினி: மனத்தூய்மைதான் முக்கியம். இரா : தாங்கள் பல யாகங்களுக்குச் சென்றிருக்கிறீர் - வரம் - அருள் - அக்னி : போயிருக்கிறேன். இரா: பல யாகங்களிலே தரப்பட்ட ஆகுதியை உண்டு-- [அக்னியின் தொந்தியைச் சுட்டிக்காட்டுகிறான்,அகனி கோபிக்கிறான்.] அக்னி என்னை வேண்டி அழைத்தவர்களுக்குத் தரிசனம் தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன். இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என் மகிமையை - நீ அறிய மாட்டாய் - ஆணவம் உனக்கு.. இரா : மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக் கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்? அக்னி: ஆமாம். இரா அந்தத் தேவ பதவி, மும்மலங்களை அடக்கி, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, தபோ பலம் பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக் கிடைத்தது.