உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அறிஞர் அண்ணா அக்னி : வேறு எப்படிக் கிடைக்கும்? பஞ்சமா பாதகம் செய்து பெறுகிற பதவியா, தேவ பதவி?. இரா : பஞ்சமா பாதகம், அரக்கர் செயல்! தேவர்,உலகுக்கு பஞ்சமாபாதகம், நஞ்சு! அக்னி : உண்மைதான் இரா : அக்னி தேவனே! சப்த ரிஷிகள் உமக்குத் தெரியுமே? அக்னி தெரியும்.. இரா ஏன் திகைப்பு! ஒரு முறை சப்தரிஷிகள் செய்த யாகத்திற்குச் சென்றிருந்தீரே, கவனமிருக்கிறதா? அக்னி: போயிருந்தேன். இரா : தபோபலம் பெற்றவரே! தவசிகள் எழுவர் செய்த அந்த தனிச் சிறப்பான யாகத்துக்குச் சென்ற தாங்கள்... என்ன செய்தீர்.. அக்னி: சென்றிருந்தேன் - அழைத்திருந்தனர். இரா : அழைக்காமலா செல்வீர்! தங்கள் மகிமையை அறிந்துதான் அழைத்தனர், அந்த மகரிஷிகள் - வரம் அருள வாரீர் என்றுதான் அழைத்தனர் அங்கு சென்று தாங்கள் செய்தது என்ன? அக்னி: ஆகுதி அளித்தனர்... ஆனால் இரா? அவர்கள் ஆகுதி அளித்தனர், அக்னிதேவனே! அவர்கள் அளித்தது ஆகுதி - தாங்கள் விரும்பியது என்ன? அகனி: நான்.. இரா : தாங்கள் விரும்பியது என்ன? மும்மலங்களை அடக்கிய மூர்த்தியே! விண்ணும் மண்ணும் போற்றும் தேவனே! அருள் வேண்டி அவர்கள் ஆகுதி அளித்தனர் - ஆனால் நீர்! எதை விரும்பினீர்- மனத் தூய்மையால் தேவ பதவி பெற்றவரே! எதை விரும்பினீர்... சொல்ல மாட்டீர்....