பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 55 பல சமயங்களில் சமயத்திற்கேற்றாற்போல் சாட்டப் படுகிறது. இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்? இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள், ஆனால், பலரால் பல சமயங்களில் இரக்கத்தைக் கொள்ள முடிவதில்லை. ஏன் வாழ்க்கையின் அமைப்பு முறைதான் காரணம். நீதி : என்ன! இரக்கம் கொள்ள முடியாததற்கு வாழ்க்கையின் அமைப்பு முறையா காரணம்? இரா : ஆம் நீதிதேவா! ஆம். நீதி : விளங்கவில்லையே, தங்களின் வாதம். இரா : விளங்காதது, என் வாதம் மட்டுமல்ல, நீதிதேவா! என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டும் கூடத்தான் விளங்கவில்லை. வாழ்க்கையின் அமைப்பு முறை, இரக்கத்தின் மன நிலைகளை மாற்றி விடுகிறது. இது என் வாதம். அது தங்களுக்கு விளங்கவில்லை. வாரும் என்னுடன்! என் வாதத்தின் விளக்கத்தினைக் காட்டுகிறேன். (புறப்படுதல்) காட்சி முடிவு] காட்சி - 10 இடம் : தேவலோகத்தில் ஒரு நந்தவனம். இருப்போர் அகலிகை, தோழி, சீதை. (அகலிகையும், தோழியும், பூப்பறித்துக் கொண்டே பேக்கிறார்கள்.] அக : என்னதான் சொல்லடி, அவர் கருணாமூர்த்தி என்றால். கருணாமூர்த்திதான். என்னை என் கணவர்,