பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - அறிஞர் அண்ணா கல்லாகும்படி சாபம் இட்டு விட்டார் - கவனிப்பாரற்றுக் கிடந்தேனல்லவா வெகு காலம் - எவ்வளவோ உத்தமர்கள், தபோதனர்கள் அவ்வழிப் போய்க் கொண்டும் வந்து கொண்டுந்தான் இருந்தனர் ஒருவர் மனதிலும் துளி இரக்கமும் உண்டாகவில்லை. தோழி கல் மனம் படைத்தவர்கள். அக : கனி வகைகளைக் கொடுத்திருப்பேன், அவர்களில் எவ்வளவோ பேருக்கு. காலைக் கழுவி, மலர்தூவி இருப்பேன் -ஒருவருக்கும் இரக்கம் எழவில்லை. கடைசியில் என் ஐயன் கோதண்டபாணி, மனதிலே இரக்கம் கொண்டு என்னைப் பழையபடி பெண் உருவாக்கினார் என் கணவரையும் சமாதானப் படுத்தினார் அவருடைய இரக்கத்தால்தான் எனக்கு விமோசனம் கிடைத்தது. - [அகலிகை பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை] சீதை : எவருடைய இரக்கத்தால்? [அகலிகை ஓடிவந்து சீதையின் பாதத்தில் மலர் தூவி, நமஸ்கரித்த பிறகு தோழியும் நமஸ்கரிக்கிறாள்.] அக : அன்னையே! நமஸ்கரிக்கிறேன். தங்கள் நாதன், ஸ்ரீராமச்சந்திரருடைய கலியாண குணத்தைத்தான் கூறிக் கொண்டிருந்தேன். அவருடைய கருணையால்தான் இந்தப் பாவிக்கு, நற்கதி கிடைத்தது. சீதை : அவரைத்தான். இரக்க மனமுள்ளவர் என்று புகழ்கிறாயா? அக: ஆமாம். அம்மணி ஏன்? சீதை : அவரையா? அடி பாவி! அவருக்கா இரக்க சுபாவம் என்று வாய் கூசாது கூறுகிறாய்?