பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அறிஞர் அண்ணா

என்ன வரும்போதே, அடுக்கடுக்காக கேள்விகளைக்

கேட்டுக் கொண்டே வருகிறாய்! எனது கலக்கம், நான் பூலோகத்தில் கண்ட காட்சிகள்தான். இலங்கேசன் தன் வாதத்திற்கு, ஆதாரபூர்வமாக பூலோக நடவடிக்கைகளைக் காட்டினான். பூலோகம் என்ன? தேவலோகத்திலும் சில காட்சிகளைக் கண்டேன். அவரவர்கள் ஏற்றிருக்கின்ற தொழில், வாழ்க்கை முறை, இலட்சியம் ஆகியவற்றால், இரக்கம் காட்ட முடியாத சந்தர்ப்பங்கள் பல நேரிடுகின்றன. இதை நினைத்தே கலக்கம் கொண்டேன். அது சரி, நீ ஏதோ காதில் பட்டது. என்றாயே, என்ன சேதி காதில் பட்டது? பணி:சந்தேகிக்கிறார்கள். சுவாமி, தங்களை. அது மட்டுமல்ல, குற்றமே சாட்டுகிறார்கள், தங்கள் மீது. நீதி:[ அலட்சியமாக] குற்றமா? என் மீதா? யார் அவர்கள்? பணி: தேவர்கள் சுவாமி! தாங்கள் இராவணனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களாம். குற்றவாளியுடன் இவர் சுற்றக் காரணம் என்ன என்கிறார்கள். நீதி : குற்றம் சாட்டப்பட்டவன், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, அநீதி, அக்ரமம், அநியாயம் என்பதை விளக்க ஆதாரங்களைக் காட்டினான். ஏன் அவனுடன் செல்லக் கூடாது? பணி: இலங்கேசனுடன் தாங்கள் செல்வது, அவனிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டுதான் என்றும் தேவர்கள் பேசுகிறார்கள் சுவாமி. [கோபத்துடன்] எவரும், எவரைப் பற்றியும் எப்படியும் ஏசித் திரியும் மனோபாவம் பூலோகத்தில் தான் பெருகியிருக்கிறது, என்று எண்ணியிருந்தேன். எந்த விதமான பற்றோ, பாசமோ, கொள்கையோ, இலட்சியமோ, இல்லாதவர்களும் பாடுபடாமலேயே