பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம்

61 பலனை அனுபவிக்க வேண்டும் என்பவர்களும் மட்டுமே இதைப் போன்ற இழிவான காரியங்களைச் செய்து கொண்டிருப்பார்கள். இந்தப் புற்றுநோய் பூலோகத்தோடு நிற்காமல், தேவலோகத்தையும் பற்றிக் கொண்டதுபோலும். அவைகளை விட்டுத் தள்ளு. காதில் போட்டுக் கொள்ளாதே. அப்படியே விழுந்தாலும், மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே! தென்னிலங்கை இராவணன், தீர்ப்பைப் பற்றி, கவலையின்றியே இந்த விசாரணையில் கலந்து கொள்கிறேன், என்று சொல்லிவிட்ட பிறகு, அவன் எனக்கு இலஞ்சம் தர வேண்டிய அவசியம் ஏது? இப்போது, கம்பர் கோபமாக உள்ளே நுழைகிறார்.] அவரைக் கண்டதும் பணி: இதோ, கவிச் சக்கரவர்த்தி அவர்களே வந்து விட்டார். கம் : நீதிதேவன் அவர்கள் ஏதோ அவசியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் இப்போது அவசியத்தோடுதான் வந்துள்ளேன். அவசியம் இல்லாமல் அந்த அரக்கனோடு, தாங்கள் பூலோகத்திற்கு சென்று வருவதும், அவனோடு குலாவிக் கொண்டிருப்பதும் கேலிக்குரியதாக உள்ளது தேவா இது அவசியம்தானா, என்று கேட்கிறேன். குற்றவாளியெனக் கருதப்படுபவன் மிகச் சாதாரணமானவன் என்று தாங்கள் கூறிட முடியாது. கம்பரே, அவன் தனக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டும் சம்பவங்களையும் சாதாரணமானதென்றும் தள்ளிவிட முடியாது. தன் இசை வன்மையால் பரமனின் உள்ளத்தையே உருக வைத்தவன். ஈடு இணையற்ற கலைஞன். இவைகளை இல்லை என்று மறுத்திட எவர் உளர் கம்பரே! அவனுடன் நான் செல்வது, அடாது. கூடாது, என்று கூறுவோர், என்ன காரணம் கூறுவார். நீதி