பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அறிஞர் அண்ணா விசு : மூவரும், மன்மத பாணத்தின்முன், அது போலப் பரிதவித்ததுண்டு, பரசுராமரே! மேனகையின் மோகன ரூபத்திலே நான் இலயித்தது பெரிய குற்றமென்று கூறுகிறீர் - இது சகஜம் - பர : [கேலியாக] மேனகையின் மோகனம்! [கோபம் கலந்து] வேத வேதாந்தத்தின் இரகசியத்தை அறிந்து ஜீவன் முக்தராக விளங்கிட வேண்டியவருக்கு, மேனகையின் விழியிலே வழியும் அழகு பற்றி என்னய்யா கவலை? (மற்றவர்களை நோக்கி அவள் அதரம் துடித்தால் இந்த தபோதனரின் யாக யோகம் துடிக்க வேண்டுமா? தூங்க வேண்டுமா? இதுவா யோக்யதை. (குரவை மெல்லியதாக்கி] ஆனால் நான் அதைக் கூடக் குற்றமென்று கூறவில்லை.(சோகக் குரலில்] மேனகையிடம் குலவினீர். குழந்தை சாகுந்தவம் பிறந்தாள் விழியிலே களிப்புடன், அந்தக் குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு, தேவ மாது மேனகை,உம் எதிரே வந்து நின்று, பிரியபதே! இதோ நமது இன்பம்! நமது மகள்! என்று கூறி ஆதரவு கோரிய போது, [குரலை மெள்ள மெள்ள உயர்த்துகிறார்.] எவளுடன் கொஞ்சி விளையாடி பஞ்ச பாணனை வென்றீரோ, எவளுடைய அன்பைக் கோரிப் பெற்றீரோ, எவளுக்காக கனல் கிளம்பும் யாக குண்டத்தை விட்டு நீங்கி, புனல் விளையாட்டுக்குக் கிளம்பி, புளகாங்கித மடைந்தீரோ. அந்த அழகு மேனகையை வெறுத்தீர்,அழ வைத்தீர் செய்தீர் வேதனைப் படுத்தினீர் சகுந்தலையை ஏற்றுக் கொள்ள மறுத்தீர் என்றீர் - தவிக்கச் குழந்தை கையாலே தொட மறுத்தீர் கண்ணாலே பார்க்கவும் முடியாது காதலுக்குத்தான் கட்டுப்படவில்லை ஒழியட்டும் காட்டுவாசத்தின் காரணமாக அந்தக் குணம் இல்லை என்று கூட விட்டு விடுவோம் குழந்தை சந்திரபிம்பம் போன்ற முகம் பொன்