பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 71 விக்ரம் அந்தக் குழந்தையின் முகத்திலே தவழ்ந்த அன்புக்காவது கட்டுப்பட்டீரா? ஓய் புலியும் அதன் குட்டியை அன்புடன் நடத்துமே, புண்ணியத்தைத் தேடி அலையும் புருஷோத்தமனாகிய உமக்குத் துளி அன்பு இருந்ததா - குழந்தையிடம் - எவ்வளவு கல் மனம்? விசு : பரசுராமரே! கோபத்தைக் கிளறாதீர். பர : எவ்வளவு இரக்கமற்ற நெஞ்சு அரக்கர் கூடக் குழந்தைகளிடம் இரக்கம் காட்டத் தவறியதில்லை. உம்மைப் போல, பெற்ற குழந்தையைத் தவிக்க விட்டு விட்டு பிரியத்துக்குரியவளைத் தேம்பச் செய்துவிட்டு, இரக்கத்தை மறந்து திரிந்தவர்களை, நான் இந்த ஈரேழு லோகத்திலும் கண்டதில்லை. விசு: [கோபம் தலைக்கேறியவராய்] ஓய் பரசுராமரே அளவு மீறிப் போகிறீர். நீதி : இருவருந்தான்! இலங்கேசன் பேச வேண்டிய நேரம் இது; உமக்குள் உள்ள தகராறுகளைக் கிளறிக் கொள்ள அல்ல. இரா : நான், அவர்களைக் குறை கூறவில்லை நீதிதேவா! இரக்கமற்ற செயலைச் செய்தவர்கள் அவர்கள், என்பதைக் காட்டுவது அவர்கள் மீது கோபித்து அல்ல! அவர்களும் பாபம், நிலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே; இரக்கம் கொள்ள முடியவில்லை. அவர்களை எல்லாம் இரக்கமற்றவர், ஆகவே அரக்கர் என்று இந்தக் கம்பர், ஏன் குற்றம் சாட்டவில்லை? இது என் கேள்வி! நான் இரக்கமற்றவன், ஆகவே அரக்கன் எனவே நான் தண்டிக்கப்பட்டதும், என் அரசு அழிக்கப்பட்டதும், தர்ம சம்மதமான காரியம் என்று கவி பாடினாரே, அதற்குத்தான் இப்போது நான் மறுப்புரை கூறுகிறேன். இவர்கள் இரக்கமற்றவர்கள், மறுக்க முடியாது. ஏன் இரக்கமற்று இருந்தனர் -