பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 73 என்பதை உலகுக்கு உரைத்தான் அந்த உத்தமன் சொல்லால் அல்ல செயலால். அவன் விரல் வெட்டப்பட்டபோது இரத்தம் கொட்டிற்றே. அதைக் கண்டாவது இரக்கம் பிறந்ததோ உமக்கு? துரோ: [நீதிதேவனைப் பரிதாபமாகப் பார்த்து] நீதிதேவா! எங்களை வரவழைத்து. அவமானப்படுத்தவே, இந்த விசாரணையை நடத்துகிறீரா என்ன? எப்படி இதை நாங்கள் சகிப்போம்? நீதி : நான் என்ன செய்ய? குற்றவாளி எனக் கருதப் படுபவனுக்கு, தாராளமாகப் பேச நமது மன்றம் உரிமை தந்தா வேண்டுமே. [இலங்கேசனைப் பார்த்து] இலங்கதிபா! ஏன் இவர்களை ஏசுகிறீர்? இவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று பொதுவாகக் கூறிவிடுமே! இரா : நீதிதேவா நான் மறு விசாரணைக்கு இசைந்ததற்குக் காரணமே, புது உண்மைகள் தெரியச் செய்ய வேண்டும் என்பதுதான் - விடுதலை கோரி அல்ல எந்தக் குற்றத்தை என். மீது ஏற்றி, என்னை அரக்கராக்கிக் காட்டினாரோ, அதே குற்றத்தைச் செய்தவர்கள், மகரிஷிகளாய், ஆச்சாரியர்களாய்.... இதோ...[கோட்புலியைக் காட்டி] நாயனாராய் உயர்த்திப் பேசப் படுகிறார்களே, இது சரியா என்று கேட்கிறேன். ஏசி இவர்கள் மனதைப் புண்படுத்த அல்ல. இதோ கொலு வீற்றிருக்கிறாரே கோட்புலி நாயனா.. நீதி : ஆமாம், சிவபக்தர். இரா : உண்மை - சிவபக்தர் பெரிய போர்வீரர் கூட இன்று நாயனார்... கம்: செந்தமிழில் சேக்கிழார்... இரா : செய்திருக்கிறார் பல செய்யுட்கள், இவருடைய சீலத்தை விளம்பரப்படுத்த.