பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அறிஞர் அண்ணா கோ : ஈசா! யானோ விளம்பரம் தேடுபவன்? கைலைவாசா! ஏனோ இத்துஷ்ட சிகாமணி என்னை ஏசக் கேட்டும், உன் நெற்றிக் கண்ணைத் திறந்திடக் கூடாது- இரா : ஐயன், வேறு ஏதேனும் அவசர அலுவலிலே ஈடுபட்டிருக்கக் கூடும் - அடியவரே! பிறகு மனுச் செய்து கொள்ளும். நீதி : சரி, சரி.... இங்கு இலங்கேசனா கோர்ட் நடத்துகிறார். இரா : இல்லை, தேவா! குற்றவாளிக் கூண்டிலுள்ள நான் என் குறையைக் கூறிக் கொள்கிறேன். வேறொன்றுமில்லை. ஐயா! கோட்புலியாரே! நீர் ஒரு கொலை பாதகரல்லவா? கோ: [காதுகளைப் பொத்திக் கொண்டு] சிவ; சிவா! கூசாது கொடுமொழி புகல்கிறான் கேட்டுக் கொண்டிருக்கிறீரே, தேவா. விசு: [கோபித்து எழுந்து] நன்று, நன்று நீதிதேவா, 'கோட்புலிக்காக மட்டும் இரக்கம் காட்டுகிறீரே -இது தான் நியாயமோ இலங்கேசன், நாங்கள் இரக்கமற்றவர்கள் என்று விளக்குவதற்குப் பல கூறினதுபோல், கோட்புலி பற்றியும் கூறட்டுமே, நாயனாருக்கு மட்டும் பாதுகாப்போ? நாங்கள் கிள்ளுக்கீரையோ! நீதி : பொறுமை, பொறுமை. இலங்கேசன் இஷ்டம் போல பேசட்டும். கோட்புலியாரே! பதில் கூறும். கோ : நானா? இவனுக்கா, நாதனின் நல்லருளைப் பெற்ற நானா முடியாது. இரா : எப்படி முடியும் என்று கேட்கிறேன். ஒரு செல்வான் மூன்றடுக்கு மாடி மீது உலவுகிறான். அவனைக் கண்டோர் அறிவார்களா, அவன், வஞ்சனை,பொய், களவு, எனும் பல படிக்கட்டுகளை ஏறித்தான், சுகபோகம் தரும் அந்த மூன்றாம் மாடிக்கு, வந்தான்