பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் 75 என்பதை. இல்லையல்லவா! அதுபோலவேதான், இதோ இங்கு நாயனாராகக் காட்சிதரும் அந்தக் கோட்புலி, பிணங்களின் மீது நடந்து, இங்கு வந்து சேர்ந்தவர். கோ: பித்தமோ? அன்றி, வார்த்தைகள் யாவும் வெறும் சத்தமோ? இரா : கோட்புலியாரே, நீர் ஓர் சிவபக்தர்தானே? கோ: ஆம், அதற்கும் தடையோ, அரனடியானே யான். இரா: அறிந்தே கேட்டேன் அடியவரே: சிவபக்தியால் நீர் செய்தது என்ன? கோயில் கோயிலாக ஓடினீர், அருள் கிடைத்தது. அதை.அல்ல நான் கேட்பது. ஒரு காலத்தில் உமது மாளிகையிலே, ஏராளமாக நெற்குவியல் சேகரித்து வைத்திருந்தீரே- கோ : ஆ...மாம். அது- வா. 'விசு : ஏன், இழுத்துப் பேசுகிறீர், பொருள், களவோ? இரா : இல்லை, முனிவரே! அவ்வளவு சாமான்யமான குற்றத்தையா இவ்வளவு பெரியவர் செய்வார்? நெல் இவருடையதே. கோயிலுக்கு என்று சேகரித்து வைத்திருந்தார்.ஒரு சமர். அதற்காக ஊரைவிட்டுச் சென்றார் - கடுமையான பஞ்சம் ஊரிலே அதுபோது ஏற்பட்டது. அதன் கொடுமை தாங்கமாட்டாமல், மக்கள் ஏராளமாக மடியலாயினர். நீதி

அதற்கு இவர் என்ன செய்வார்?

விசு : ஏன், சிவ பக்தர் பஞ்சத்தைத் தடுத்திருக்கக் கூடாது என்று கேட்கிறார் இலங்கேசன்?' இரா : இல்லை, இல்லை, அவ்வளவு பெரிய காரியத்தை நான் எப்படி இவரிடமிருந்து எதிர்பார்ப்பேன். நான் சொல்வது வேறு, அந்தப் பஞ்சம், இவருடைய பண்டசாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்