பக்கம்:நீதிதேவன் மயக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அறிஞர் அண்ணா பொருள் கிடைத்தால் தலை காட்டியிருக்காது. மக்கள் மடியமாட்டார்கள். பிணம் கீழே வீழ்ந்தது இவர் கிடங்கிலே நெல் மூட்டைகள் ஏராளம். உணவுக்காக வெளியே திண்டாட்டம் - உள்ளே நெல்குவியல் குன்று போல. நீதி : விவரம் குறைத்து.... இரா : விஷயத்தைக் கூறுகிறேன். பஞ்சத்தில் அடிபட்ட மக்கள், கிடங்கிலிருந்து உணவுப் பொருளை எடுத்துக் கொண்டனர். கோ: [கோபமாக) என் உத்தரவின்றி - நான் ஊரிலில்லாத போது சிவகாரியத்துக்கென்று இருந்த என் செந்நெல்லைக் களவாடினர். இரா : களவு அல்ல! பகிரங்கமாகவே எடுத்துக் கொண்டனர். எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற - பிறகு தந்து விடுவோம் என்று எண்ணி. கோ: கொள்ளை அல்லவா அது? இரா : கிடங்கிலே நெல்லை, பஞ்சகாலத்தில் குவித்துக் கொள்வது? நீதி : அதுவும் குற்றம்தான். இரா : இதற்கு நீர் செய்ததென்ன? கோட்புலியாரே! அன்பே சிவம் சிவமே அன்பு - அந்தச் சிவத்துக்கு நீர் அடியவர் அடியாரே! பட்டினிப் பட்டாளம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நெல்லை எடுத்துக் கொண்டனர். சிவத்தொண்டராம் தாங்கள் என்ன செய்தீர்? - பர : நியாயமான கேள்வி? நானாவது என் தகப்பனாரின் சொல்லைக் கேட்டு தாயின் தலையை வெட்டினேன் கோட்புலி செய்தது எனக்கும் கேள்விதான். ரொம்ப அக்ரமம், ஈவு இரக்கமற்ற செயல்.