பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நீதிநெறிவிளக்கம் டுஉ. ஆள் வினைத் திறம் கால மறிக் தாங் கிடமறிந்து செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து-மேலுங் காஞ் சூழ்வன சூழ்ந்து துணேமை வலிதெரிங் தாள்வினை யாளப் படும். 1. காலம் - (செப்தற்குரிய) காலத்தினே, அறிந்து - அறிந்தும், இடம் - (செய்து முடித்தற் கேற்ற) இடத்தினை, அறிந்து அறிந்தும், செய்வினையின் - செய்யக் கருதிய கருமத் கின், மூலம் - காரணங்களே, அறிந்து - அறிந்தும், விள்ைவு - பயனே, அறிந்து - அறிந்தும், மேலும் - அதன் பின்னும், தாம் - (வினைமுடிக்கக் கருதியோர்) தாம், சூழ்வன - ஆராய்ந்து முடிவு காண வேண்டியவற்றை, சூழ்ந்து - ஆராய்ந்தும், துணைமை - அணேயாயிருப்பவர்களின், வலி - வலிமைகளை, தெரிந்து - அறிந் அதும், ஆள்வினை - (மேற்கொண்ட) வினை (க்குரிய) முயற்சி, ஆளப்படும - செய்யப்படும் ; (அதுவே தகுதி யுடைத்தாம்). 2. ஆள்வினே, காலமறிந்து, இடமறிந்து, செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து, காம் சூழ்வன சூழ்ந்து, துனேமை வலி தெரிந்து ஆளப்படும். 3. காலமும் இடமும் கருவியும் துணையும் ஆராய்ந்தறிந்து சூழ்வன சூழ்ந்து முயலுதலே தெரிந்து வினை செய்தலாம். 4. வினை வலியுங் தன்வலியும் மாற்ருன் வலியுங் துணைவலியுங் தாக்கிச் செயல்.’ -குறள். ' பொருள்கருவி காலம் வினையிடனே டைந்தும் இருடிா வெண்ணிச் செயல்.’ -குறள்.

  • முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.” -குறள். ' இடத்தொடு பொழுது நாடி யெவ்வினைக் கண்ணு மஞ்சார் மடப்பட லின்றிச் குழு மதிவல்லார்க் கரிய துண்டோ தடத்திடைக் காக்கை யொன்றே யாயிாங் கோடி கூகை இடத்திடை யழுங்கச் சென்ருங் கின்னுயிர் செகுத்த தன்றே.” -சீவக சிந்தாமணி. ' வலியே கால மிடமிவற்ருன் மாற்ருன்றனக்கு முனக்குமுள பலவா நிலையும் வினைதொடங்கும் பண்புமதற்கா மிடையூறும் விலகா கதனை விலக்குவதும் வெல்லுமாறும் வென்ற தன அலவாப் பயனு முதலனைத்து மோர்ந்துதெளிந்தே வினைசெய்க." -விநாயக புராணம்.