உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நீதிநெறி விளக்கம் எஉ, அடக்க மில்லாதார் அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண் டொல்காதார் வாய்விட் டுலம்புப-அல்லாற் பிறர் பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுகிற்பா ரார். 1. அல்லன - (அறப் பயன் அளிக்கவல்லன) ஆகாத செயல்களை, செய்யினும் - செய்வார்களாயினும், ஆகுலம் - ஆர வாரத்தையே, கூழாக்கொண்டு - பயனகக் கருதி, ஒல்காகார் - அடக்கமில்லாகார், வாய்விட்டு - (பலரறியக் கஞ் செயல்களே) வாய்கிறந்து, உலம்புப உளறி முழங்குவர் ; அல்லால் - இவ் வாறன்றி, பிறர்பிறர் (அடக்கமுடைய) பிறரெல்லாம், செய்ப போல் - செய்யுமாறு போன்று, செய்தக்க - (அறப்பயன் அளிக்க வல்லனவாய) செயக்கடவ செயல்களே, செய்து - செப்து முடித்து, ஆங்கு அச்செய்கைகளில், அறிமடம்- (காம்) தெரிந்தும் தெரியாமையாகிய தாழ்மையை, பூண்டுகிற்பார் - மேற்கொண் டிருப்பார், ஆர் - யாவர் ? (ஒருவரு மிலர்). 2. ஒல்காதார் அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண்டு வாய்விட்டு உலம்புப, அல்லால் செய்தக்க பிறர்பிறர் செய்டபோற் செய்து ஆங்கு அறிமடம் பூண்டு நிற்பார் ஆர். 3. அறனல்ல செய்யினும் பெருமை பேசுவர் அறிவிலார் ; செயற்கரிய செய்தும் வெளிக்காட்டா திருப்பர் கற்றறிந்தடங்கிய சான்ருேர். 4. பணியுமா மென்றும் பெருமை சி. மை அணியுமாங் தன்னை வியந்து.' --குறள ' கற்றறிவார் கண்ட தடக்கம் அடங்காகார் பொச்சாங் துங் கம்மைப் புகழ்ங் அாைப்பார்.” -பழமொழி.

  • முல்லைக் குத்தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாாைக் கேட்டறிதும்-சொல்லின் நெறிமடற் பூங்காழை மீடுநீர்ச் சேர்ப்ப அறிமடமும் சான்ருேர்க் கணி.” -பழமொழி.

5. ஒல்லாதார் அல்லன செய்யினும் வாய்விட்டு உலம்புப ; வல்லார் செய்யத்தக்க செய்து, அறிமடம் பூண்டு நிற்பார்.” - உ. வே. ச.. 'அடக்க மில்லாதவர்-மனம் வாக்குக் காயங்க ளடங்குத வில்லாதவர். அவர்கள் செய்யுஞ் செயல்கள் பிறர்க்குப் பயன்படாதன ஆதலால் அல்லன.