உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நீதிநெறிவிளக்கம் கஎ. பெரியோர் பணிவு ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணி னனிதாழ்ப-து.ாக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே காழுந் துலேக்கு. " . 1. ஆக்கம் - (கல்வி, பொருளாகிய இரு) செல்வவளத்தில், பெரியார் - மிகுந்தவர்கள், சிறியார் இடைப்பட்ட - (அவ்விரு வகைச் செல்வமுங்) குறைந்தவர்களிடத்தே உண்டாகிய, மீச்செலவு - வரம்புகடந்து நடக்கும் நடக்கையை, காணின் - காண்பார்களாயின், நனி - மிகவும், தாழ்ப - தாழ்ந்து போவார் கள் ; தாக்கின் - தாக்கிப்பிடித்தால், மெலியது - எடை குறைந்த பொருளுள்ள தட்டு, மேன் மேல் - மேலும் மேலும், எழ - எழுவதற்கு, செல்லச் செல்ல - உயரும் பொழுதெல்லாம், வலிது - எடை மிகுந்த பொருளுள்ள கட்டு, அன்றே அல்லவோ, காழும் - தாழ்ந்துபோகும், துலேக்கு - கராசின்கண். 2. துலேக்கு தூக்கின் மெலியது மேன்மேல் எழச் செல்லச் செல்ல வலிதன்றே தாழும் ; (அதுபோலவே) சிறியாரிடைப்பட்ட மீச்செலவு காணின் ஆக்கம் பெரியார் நனிதாழ்ப. 3. கல்வியுஞ் செல்வமும் உடையார்க்குச் சிறப்பை யளிப் பது அவையில்லாதார் வரம்புகடந் தொழுகுமிடத்தும் செருக் கின்றித் தாழ்மையுடன் நடந்துகொள்வதேயாம். 4. “ பெருமை பெருமித மின்மை சிறுமை பெருமித மூர்ந்து விடல்.” -குறள்.

  • சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம்

பெரியோ ராயிற் பொறுப்பது கடனே ? -வெற்றிவேற்கை. ' கற்றறிந்த நாவினர் சொல்லார்கஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர்-பனையின்மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி.” -நாலடியார். 5. ஆக்கம் என்றது இருவகைச் செல்வத்தையும். இருவகைச் செல்வங்களு ளொன்றேனுங் குறைவறப் பெற்ருேர் அவற்ருலாய பயன் முற்றும் அறிந்தவராதலின், பணிந்து நடத்தல் அவர்க்கியல்பு என்பார் பெரியார் காழ்ப எனவும், அவற்றி ற் சிறியோர் அவற்ருலாய பயன் முற் அம் அறியாாாதலின் வரம்பிகந்து நடத்தல் அவர்க்கியல்பு என்பார், பட்ட மீச்செலவு எனவும் கூறினர்.” -தி. சு. செ.