பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நூல் அல்லது அறிக்கை தனது நூலகத்தில் இல்லையென் ருல், அதை வேறு சிறப்பு நூலகத்திலிருந்து அல்லது வேறிடத்திலிருந்து நூலகர் கடனுகப் பெறலாம். இது போன்ற நேரங்களில், தகவல்களைப் பெறுவதற்குத் தொலை பேசி மிகவும் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பு நூலகர் தேடிக் கொண்டிருக்கும் தகவல் உண்மையிலேயே மிகவும் இன்றியமையாததாக இருக்குமானல், அதைப் பெறும் முயற்சியில் நாடு கடந்தும் செல்லவேண்டியிருக்குமானுல் அதற்கும் சிறப்பு நூலகர் சிறிதும் தயங்கக் கூடாது. சுருங் கக் கூறின், சிறப்பு நூலகர் தனது வாடிக்கைக்காரருக்கு அவர் கேட்ட தகவலை மட்டுமின்றி, அவருக்குத் தெரியாத ஆளுல் அவருக்கு உதவக்கூடிய வேறு தகவல்களையும் சேகரித்து வழங்க வேண்டும். சிறப்பு நூலகரின் இத்தகைய சிறப்பான பணியின் பயனுகப் பலசமயங்களில் பெரும் நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு இரசாயன நிறு வனத்தைச் சேர்ந்த இரசாயன நிபுணர் ஒருவர் ஒரு சமயம் 10.000 டாலர் செலவிட்டு ஒரு பரிசோதனையை நடத்தத் திட்டமிட்டார். ஆனல். அதே பரிசோதனையை ஏற்கனவே ஒரு ஜெர்மன் நிறுவனம் நடத்தி இருக்கிறது என்பதை அந்த நிறுவனத்தின் சிறப்பு நூலகர் ஒரு மொழிபெயர்ப்பு நூலிலிருந்து கண்டறிந்தார். அத்துடன் அந்தப் பரி சோதனை பற்றிய மேல் விவரங்களைச் சேகரித்துக் கொடுத் தார். அந்த மொழிபெயர்ப்பு நூலின் விலை 5 டாலர்தான். சிறப்பு நூலகர் அதைத் தக்க நேரத்தில் கண்டு பிடித்துத் தெரிவித்ததன் பலகை 10,000 டாலர் மிச்சமாகியது! இரத்த சோகையைக் குணப்படுத்தக் குதிரையின் துரை யீரலைப் பயன்படுத்தலாம் என ஒரு பத்திரிகையில் வெளி யான கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் சிறப்பு நூலகர், இந்தக் கட்டுரையைப் படித்து அதை நிறுவனத்தின் நிபுணர்களுக் குத் தெரிவித்தார்.அதன்பின், அந்த நிறுவனம், அக்கட்டுரை யில் கண்டிருந்தபடி வேறு பொருளை உற்பத்தி செய்யத்