பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு நூலகங்கள் I [] [] தொடங்கியது. அதுமுதல் அதன் இலாபம் மூன்று இலட் சம் டாலர் கூடுதலாகியது. ஒரு மருந்து நிறுவனத்தின் சிறப்பு நூலகர், நூலகத்திற்கு வந்த 400 தொழில் நுட்பப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியலைத் தொகுத்துப் படியெடுத்து அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி நிபுணர்களுக்கு வழங்கிவந்தார். இதனால், நிபுணர்களின் பொன்னை காலம் வீனகாமலிருந்ததுடன், அதனல் ஆண்டுதோறும் 50,000 டாலர் மிச்சமும் ஆகியது. எனவே சிறப்பு நூலகங்களை மிகப் பெரிய ஆராய்ச்சி ஆதாரங் களாக நிருவாகத்தினர் மதித்துப் போற்றி வருவதில் வியப் பில்லை. அமெரிக்காவில், 80 மோட்டார்த் தொழிற்சாலை களிலும், 60 மின்சார சாதன நிறுவனங்களிலும் ஸ்டாண் டர்டு ஆயில், அமெரிக்க எஃகு நிறுவனம், இலிலில்லி (Eli Lilli), FF sivll-Gidsår (35rr rrji (Eastinan Kodak), 38. Lo. எம்., லாக்ஹீட் விமானத் தொழிற்சாலை போன்ற பெரிய தொழில் நிறுவனங்களிலும் சிறப்பு நூலகங்கள் உள்ளன. விளம்பர நிறுவனங்கள் பத்திரிகை, காப்பீட்டு (Insurance) அலுவலகங்கள். வங்கிகள். சட்ட மருத்துவ சமய நிறு வனங்கள். பொருட்காட்சிசாலைகள், நூல் வெளியீட்டு நிறுவனங்கள், வாணிகக் கழகங்கள். அரசாங்கத்துறைகள், முப்படைத் தலைமையகங்கள் ஆகியவற்றிலும் சிறப்பு நூல கங்கள் முக்கிய அங்கங்களாக அமைந்துள்ளன. அறிவுத் துறைகள் பெருகப் பெருக வளர வளர, சிறப்பு நூலகங் களின் தேவையும் பெருகிக் கொண்டே வருகிறது. சிறப்பு நூலகங்களில் பல தரப்பட்ட நூல்கள் ஏராளமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதால், வேண்டிய நூல்களை எளிதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடிகிறது. விஞ்ஞா னத்துறையில் பெரிய சிறப்பு நூலகங்கள் பல உள்ளன. இந்நூலகங்களில், நூற்பட்டியியல் நிபுணர்கள், நூல்-கட் டுரை விவரத் தொகுப்பாளர்கள் (Documentalists), ஆராய்ச்சி உதவியாளர்கள் போன்ருேருக்குச் சிலசிறப்பான கடமைகள் உள்ளன. சிறு நூலகங்களில், அடிப்படையான