பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I () நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் சில ஆய்வு உதவும் நூல்களும், சான்றுக் கட்டுகளும் (Files) மட்டுமே இருக்கும். இந் நூலகங்கள் முக்கியமாகத் தேவைப்படும் தகவல்களை வெளி நூலகங்களிலிருந்தே பெற்றுக்கொள்கின்றன. இங்கு தொழில் முறை நூலகர் கள் இருவரும் ஒரிரு உதவியாளர்களும் (clerical assistals) பணி ரிகிருர்கள். நூலகம் எந்த அளவு சிறிதாக இருக் கிறதோ அந்த அளவுக்கு, நிருவாகம், தொழில் நுட்பம் இரண் டி லும் அதன் கடமைகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. ஆளுல். பெரிய நூலகமாயினும் சிறிய நூல கமாயினும், எல்லாச் சிறப்பு நூலகங்களும் அவை சார்ந் திருக்கும் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நன்கு அமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் முன்னேற்றத்தில் சிறப்பு நூலகருக்கு அக்கறை இருப்பதால் அவர் நிறுவனத்திற்கு உதவும் வகையில் தமது கடமை களைச் செவ்வனே செய்கிருர். நூலகத்தை நிறுவனத்தின் ஒர் இன்றியமையாத அங்கமாக உருவாக்க அவர் பாடுபடு கிரு.ர். தேவையான தகவலைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான வடிவத்தில் துரிதமாகவும். துல்லியமாகவும், குறைந்த செலவிலும் கொடுக்கும் வயிைல் நூலகத்தைச் சிறந்த வகையில் உருவாக்குவதற்கு அவர் அரும்பாடுபடு கிரு.ர். இந்தச் சேவையைச் சிறப்பாகச் செய்வதிலும், அதன் மதிப்பை உயர்த்துவதிலும் கருத்துடைய நூலகர் எந்தப் பணியிலும் தானே முன்னிற்கிருர். புதிய நுட்பங்களையும், கருத்துக்களையும் அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள் கிருர், துண்சுருள் (Microfilm) படி, புகைப்படப் படி (Photocopy) முதலியன எடுத்தல் போன்ற எந்திரக் கருவி முறைகளை அவர் தாராளமாகப் பயன்படுத்துகிருர், ஆளுல், உலகிலேயே மிகவும் அதிசயமான மின்காந்த எந்திரங்கள் (Electronic machines) வந்தபோதிலும், நூல கத்தின் தலையாய தகவல் ஊற்ருக, கருத்துச் சுரங்கமாக விளங்கும் மனித மூளையின் அரும்பயனை அவர் ஒருபோதும்