பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 14 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை மட்டும் எல்லா நூலகங்களுக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது. சிறப்பு நூலகர் தனது நிறுவனத்துடன் ஒன்றிவிடுகிரு.ர். அந்நிறுவனத்தின் ஒர் அங்கமாகவே நூலகத்தை அவர் கருதுகிருர் ஆராய்ச்சிகளும், தொழில் முன்னேற்றமும் கடும் வேகத்தில் பெருகிவரும் இந்நாளில் அன்ருட வளர்ச்சி களே அறிந்து அவற்றைக் கைக்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என்பதை இக்கால தொழில் நிருவாகி கள் நன்கு உணர்ந்திருக்கிரு.ர்கள். இவ்வளர்ச்சிகள் பற்றிய தகவல்களே உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு சிறப்பு நூலகமே சிறந்த சாதனம் என்பதனையும் அவர்கள் அறிந் திருக்கிருர்கள். கேள்விகள் கேட்கப்படுவதற்கு முன்பே, அதற்குரிய தகவல்களைச் சேகரிப்பதில் சிறப்பு நூலகர்கள் ஈடுபடுகிரு.ர்கள். என்னென்ன தகவல்கள் தேவைப்படும் என்பதை முன்னதாக ஊகித்தறிந்து, அவற்றுக்குரிய நூல் களைச் சேகரித்து, பயன்படுத்துவதற்கு ஆயத்தமாக சிறப்பு நூலகர் வைத்திருக்கிருர். இத்தகவல்களைப் பயன்படுத்தி, நிறுவனத்தின் அதிகாரிகள் ஒரு சிக்கலைத் தீர்த்து அல்லது காலவிரயத்தைத் தவிர்த்து உழைப்பையும் பணத்தையும் மிச்சப்படுத்துவாராளுல், அதனுல் முதலில் மகிழ்ச்சியில் திளைப்பவர் சிறப்பு நூலகராகத்தான் இருப்பார். அமெரிக்காவில் ஜெனரல் எலக்ட்ரிக், ஜெனரல் மோட் டார்ஸ், ஸ்டாண்டர்ட் ஆயில் போன்ற பெரிய வாணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, அமெரிக்கத் தொலைபேசிதந்தித்துறையிலும் கூட சொந்த நூலகங்கள் உள்ளன. டெட்ராய்ட் எடிசன் கம்பெனி என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான நூலகத்தில் 12 நூலகர்கள் பணியாற்று கிருர்கள். இந்நூலகத்தின் நடவடிக்கைகள், சிறப்பு நூல கங்களுக்கு பொதுவாக அமைந்துள்ளன. நூல்கள் வாங்கு தல், வகைப்படுத்தல், புதிய நூல்களின் பட்டியல் தயாரித் தல், காலத்திற்கு ஒவ்வாதவனவற்றை ஒதுக்கித் தள்ளுதல் ஆகிய இந்தப் பணிகளை மட்டுமின்றி தொழில் நுட்பம்