பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - _ மருத்துவத்துறை பற்றி மட்டும் ஆண்டுதோறும் 5000 பத்தி ரிகைகளும், 10,000 நூல்களும் வெளிவருகின்றன. இவற்றை யெல்லாம் உடனுக்குடன் சேகரித்து, துரிதகதியில் இயங்கி வரும் ஆராய்ச்சியாளர்க்கு தேவைப்படும் தகவல்கள் உட னடியாகக் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டியது மருத் துவ நூலகரின் கடமையாகிறது. அமெரிக்காவில் மருத்து வர்களுக்கும், இத் துறையில் பணியாற்றும் மற்ற ஊழியர் களுக்கும் உதவுவதற்காக 400 மருத்துவ நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள்,வாசிங்டனிலுள்ள தேசிய மருத்துவ நூலகமே மிகப் பெரியது. இங்கு ஏறத்தாழ 10 இலட்சம் நூல்கள் உள்ளன. பெரும்பாலான மருத்துவ நூலகங்கள் சிறு இடங்களிலேயே இயங்கி வருகின்றன. அவற்றில் இலட்சத்திற்குக் குறைவான நூல்கள் இருக்கின்றன. சில நூலகங்கள் மருத்துவப் பள்ளிகளிலும், இன்னும் சில ஆராய்ச்சிக் கூடங்களிலும், மருத்துவக் கழகங்களிலும், மற்றும் சில மருத்துவ மனேகளிலும் அமைந்துள்ளன. மருத்துவ அல்லது பல்மருத்துவ ஆசிரியர்கள், மாணவர் கள், பயிற்சியாளர்கள், தொழில் நடத்தும் மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், மருந்து விற்பனையாளர் கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் (Nurses) ஆகிய பலதரப்பட்டவர்கள் மருத்துவ நூல் களைப் பயன்படுத்துகிரு.ர்கள். பயன்படுத்துவோரின் வகை யையும் தொகையையும் பொறுத்து மருத்துவ நூலகத்தின் நூல்களின் தொகையும் பணிகளும் அமைகின்றன. மருத் துவப் பள்ளிகள் அல்லது நிலையங்களுக்கு நூல்கள் சேகரிப் பதற்கு ஆகும் செலவை விடக் குறைந்த செலவில் மருத்துவ மனைகளுக்கான நூல்களைச் சேகரிக்க முடிகிறது. போதிய வசதிகளுடைய மருத்துவ நூலகம், ஒவ்வொரு மருத்துவ மனைக்கும் இன்றியமையாத ஒன்ருகக் கருதப்படுகிறது. எனவே, சின்னஞ் சிறு மருத்துவமனையானல் கூட அங்கு அடிப்படையான ஆய்வு உதவும் நூல்கள் அனைத்தும் உள்ளன. இவை தவிர, மருத்துவம் குறித்த முக்கியமான